பக்தியுடையார், அறிக;இந்தப் பரவச நிலையைப் பெறுக!
‘கண்ண பிரானே’ என்று ஆறு கவிதைமலர்களில் பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணனை விழித்து ,அவனுடைய பிறந்த நாளாக நாம் போற்றும் ஸ்ரீ க்ருஷ்ண ஜயந்தி அன்று (1.09.2010) இரவு மனதில் அர்ச்சித்துக் கொண்டேன்.மறு நாள்,
’இது முக நூல்’ நண்பர்களின் பக்தி ரசனைக்காக,இக்கவிதை உரித்தாகட்டுமே’என்று எண்ணியவாறு எனது வலைத் தளத்தில் இதைப் பதிவு செய்தேன்.
பதிவு செய்யும் போதே,உள் மனத்தில்ஒரு கேலிச் சிந்தனை ... “பையித்தியக்காரா...இந்தப் பாட்டை எல்லாம் யார் படிப்பார்கள்?” என்றது, அது.
விரல்கள் அதைப் பொருட் படுத்தாமல் பதிவு செய்து விட்டது. அடுத்த பணிகளில் மூழ்கத் தொடங்கிய என் உள்ளுணர்வில் யாரோ என் முதுகைத் தட்டியது போல்......எனது ‘முக நூல்’ பக்கம் சென்றன விழிகள்...
ஆச்சர்யம்...
"Beautiful words ” என்று மலேஷியாவிலிருந்து திருமதி.கலாவதி அவர்களின் பாராட்டுவரிகள்.
அவர் எழுதியது அவரது ரசனைக் கருத்தே ஆயினும்,ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றிய’ என் கவிதைகளின் வரிகளுக்கு உடனடியாக பதில் வந்த விதம்,அந்தப் பரமாத்மனின் representation என்றே மனம் களிப்புற்றது. அதன் எதிரொலியாக உடனே தோன்றியதுதான்,இந்த “கண்ணா,உன்னோடு” உணர்ச்சிக் கவிதை:நன்றி.
(குறிப்பு: ‘கண்ண பிரானே’ என்று ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி அன்று நான்எழுதிய கவிதைகளைப் படிக்க விரும்புவோர் இதே பக்கத்தில் நண்பர்களின் comments உடன் காணலாம்)
கண்ணா,உன்னோடு...
--------------------------------------
எந்த ஊரில்,எந்த உருவில்
என்னைப் பார்க்கின்றாய்?நான்
சந்தம் கொண்டு பாடும் கீதம்
சாட்சி சொல்கின்றாய்;கண்ணா,
இந்த நிலையை மாற்றிடாமல்
இருக்க வேண்டு கிறேன்;நான்
உந்தனோடு என்றும் இருந்து
உலகை மறந்திருப்பேன்!
-கிருஷ்ணன் பாலா
(எழுதிய நாள்: - - 2008)

1 comment:
hello sir, how are you? am Rajalakshmi from T.I.M.E. This poet is really nice. i like the last two lines more.. as it says "unthanodu inainthirupean ulagai maranthirupean".. it sound like this to me - kadavul thanmaiyai enrum unarvu poorvamaha ninainthirukumpothu, intha ulga kavalaigalai maranthirakalam... endra unmai vilangukirathu.... thankalathu allamana karuthukaluku mikka nandri.. vaazhthukal..
Post a Comment