திருமதி.கலைவாணி ஜான்சன், ’முக நூல்’ (FACE BOOK) மூலம் எனது நண்பரானவர்.மலேஷிய நாட்டுத் தமிழ்ப் பெண்மணி. எனது இந்த வலைத் தளம் சென்று,அதில் என்னைப் பற்றி,நானே அறிவித்துக் கொண்ட (’என்னைப் பற்றி..’ என்ற) ‘முகமன்’ குறிப்பைப் படித்து விட்டுக் கொட்டிய நுகர்ச்சி வரிகளை அப்படியே இங்கே பதித்துள்ளேன்.
Kalaivani Johnson (facebook) September 1, 2010 at 6:15 pm (இது இந்திய நேரப்படி).:
மிக்க மகிழ்ச்சி..தங்கள் புரிதலும் மிக அருமை...
நீங்கள் எழுதிய கவிதை வரிகளுக்கு.. எனது பின்னூட்டம் எழுதியுள்ளேன்...உரைவீச்சு பாவனையில், தவறிருப்பின் மன்னிக்கவும்..உங்கள் எழுத்துக்கு முன் நான் சாதாரணமானவள்...என்னை பின்னூட்டம் எழுத கேட்டு கொண்டமைக்கு ..மிக்க நன்றி
Kalaivani Johnson commented on my note in this blogspot"என்னைப் பற்றி.....".
“வரிகளில் விளையும் வர்ண ஜாலங்கள்
வகை வகையாய் வண்ண கோர்வைகள்
வாழையடி வாழையாய் வந்த தமிழ் மொழி
வசந்தம் இழையோடும் மொழியானது
பிறந்த ஊரும் வளர்ந்த மைய பகுதியும்
பிரமாதமாக கூறுகிறது வாழ்க்கை சரித்திரத்தை
பிரித்து சுவைத்து சொல்லும் அழகே அழகு
பிறகு ஏற்காமல் இருப்பதெப்படி?
நேர்மை நிஜமாய் இருக்க,
நேர்த்தியாக எஜமானன் ஆவதெங்கே?
நேற்று நடந்த மாதிரியே,வாழ்க்கை அனுபவத்தை
நேசமாக அசை போடும் பாணி மிக சிறப்பு
உள்ளத்தில் உள்ளதை, உதட்டில் பேசி
ஊமையாகிப் போனது மிக அருமை
ஊர் சொல்கிறது உங்கள் புகழை அதனாலே
உண்மை என்று ஆனது வாழ்ந்த காலம்
சத்தியம் கொண்டு உண்மையாய் வாழும் மனம்
சண்டாள தனத்தை விரும்புவதில்லை
சங்கடங்கள் நீங்கி சௌக்கியங்கள் நிறைந்து
சதா தமிழோடு வலம் வர வாழ்த்துக்கள்
நிரந்தர முகவரியாக இந்த வரிகள் இருக்க
நிறங்கள் நிறைந்த எழுத்துக்கள் இருக்க
நிலையாய் என்றும் போற்றிடும்
நிஜமாய் என்றும் நிலைத்திடும்
தங்கள் வாழ்க்கை சரித்திரமும் தமிழ் பற்றும்
வாழிய வாழியவே தமிழும் தங்கள் தமிழ்த் தொண்டும்”.
-------------------------------------
கிருஷ்ணன் பாலா எழுதுகிறேன்:
அறிவார்ந்த நண்பர்களே!
வணக்கம். திருமதி கலைவாணி ஜான்சன் அவர்களுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்.நேசம் நிறந்த தமிழ் உணர்வுகள் அவருடைய எழுத்தில்;கருத்தில்....
எனது நோக்கம்,புகழுரைகள் பெறுவதன்று;தமிழ் நாட்டுக்கு வெளியில் வாழ்கின்ற நம் தமிழர், நல்ல சிந்தனைகளை,தமிழ்ப் பண்பு சார்ந்த உணர்வுகளை,நல்ல எழுத்தில் கண்டு மகிழ வேண்டும்; ’தமிழர் நாம்’எனத் தரணியில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும்’ என்பதுதான்....
எனது வலைத் தளத்தில் பதிவு செய்துள்ள, ’தமிழருக்கு விண்ணப்பம்’, ’தமிழா...தமிழா’, ‘எரிவது,நெஞ்சில் நெருப்பு’ முதலான கவிதைகள்,அதன் சொல்லாட்சி,இயைபுச் சந்தம் மற்றும் எதுகை,மோனைகள் இந்த லட்சியத்தை எடுத்துச் சொல்லும்.
நட்புடன்,
கிருஷ்ணன் பாலா

No comments:
Post a Comment