Friday, September 30, 2011

இது, சொல்லாயுதம்!


அன்பிற் குரிய நண்பர்கள்: நல்ல
அறிவு
 செழித்த வாசகர்; முன்பின்
என்னை
 அறியா நண்பர்கள் மற்றும்
இதனைப் படிக்கும் யாவரும்,அறிக:

எழுத்து என்பதைப் புனிதத்தோடு
எழுதும்
 எண்ணம் கொண்டவ ரிடையே
அழுத்தம்
 கொண்டு நிற்பவன் நான்;என்
அகத்தில்,
 எழுத்தில் பொய் இல்லாதவன்!

எதை
 ’நான்’ ’எனது’ இலட்சியம் என்று
எடுத்துச்
 சபையில் ஓதுகின்றேனோ;
அதையென்
 வாழ்வில் நடைமுறையாக்கி 
அகச்சான்
 றோடு வாழு கின்றவன்!.

’நான்’ ‘நான்’
 என்று எழுதி வருவதை
’நன்றாய்
 இல்லை’ என்று, சிலபேர்
தான்சொல்கின்றார்;
 அவருக்குச் சொல்வேன்::
‘தமிழின்
 எழுத்துக் கர்வம் அது’தான்!

சின்னஞ்
 சிறிய வயது முதலே
செழுந்
 தமிழென்றன் சிந்தை புகுந்தது;
தன்னந்
 தனியே வளர்ந்தேன்;எனக்குத்
தமிழைத்
 தந்தனள்;அன்னை வாணி!

அவளே
 எனக்குக் குருவாய்,அறிவாய்
அனைத்தும்
 ஆனவள்;என் குருநாதன்
தவப்பொருள்
 யாதென உணர்த்தினன்;ஆங்கு
‘தரமாய்
 எழுதும் தனித் திறன்’ வாய்த்தது!

பழம்புத்
 தகங்கள்; ‘பார்பர்’ கடைகளில்
படித்திடும்
 இதழ்கள்; ள்ளிக்குநிகராய்த்
தொழும்நூ
 லகங்கள் துணையாய் இருக்கத்
தொடர்ந்து
 பயின்றேன்;உலகியல் வாழ்வை!

இளமைக்
 காலம் வறுமையில் இருந்தது:
இனிவரும்
 காலம் அறிவினில் இருப்பது:
வளமை
 என்பது பணத்தினில் இல்லை;
வளையா
 நெறிமுறை தான்உயர் வாழ்வு!

கற்றதன்
 வழியில் நிற்கும் முயற்சி;
கசடற
 வாழ எடுக்கும் பயிற்சி:
அற்றது
 நீக்கி உற்றது நோக்கி
அடிவைப்
 பவன்நான்; அவையோர் அறிக!

என்எழுத்
 தைத்தான் எழுதி வைக்கிறேன்;
எடுப்போர்;புரிவோர்
 படித்து மகிழ்க!:
பொன்னெழுத்
 திதுவெனச் சொன்னா லதனைப்
புழுங்கிக்
 கொள்வோர்;விலகிக் கொள்க!

எவர்பொருட்
 டும்என் எழுத்துக்க ளில்லை;
எதிரிகள்
 எனக்கு எவரும் இல்லை;
தவறுகள்
 களைந்திடத் தானென்எழுத்து; ;
தமிழறிந் தோர்க்கே இதுசொல் லாயுதம்!

இளம்சமு
 தாயம் எதிர் காலத்தில்
இருந்திடும்
 முறைமை யாதெனக் கருதி
உளம்உணர்
 வோடு எழுதும் என்னை
உற்றவர்,பெற்றவர்
 படித்துக் கொள்வர்!

கற்றவர்
 யாரும் கருத்துரைத் திடவும்
கல்லா
 மாந்தர் கற்றுக் கொள்ளவும்;
மற்றவர்
 எல்லாம் விலகி இருக்கவும்
மனம்திறந் துரைத்தேன்;அறிக யாவரும்!

நட்புடன் 
கிருஷ்ணன்பாலா
30.9.2011

3 comments:

Rathnavel Natarajan said...

வளமை என்பது பணத்தில் இல்லை;
வளையா நெறிமுறைதான் நல்வாழ்க்கை!

நல்ல கவிதை.
நன்றி ஐயா.

kuppuswamy said...

thangal valaipoo karuthukkal azhamanavai tamil thennil thoithu eduthavai manithani pakkuva paduthubavai -- valarga um paani

gnana. kuppuswamy

Unknown said...

//அற்றது நீக்கி உற்றது நோக்கி
அடிவைப்பவன் நான்,அவையோர் அறிக//

அனைவரும் அறியும் காலம் வரும்.அன்று உன் எழுத்தின் கருத்து எளிதில் விளங்கும் பாலா!!!