அறிவார்ந்த நண்பர்களே!
“கூரை ஏறி,கோழி பிடிக்க முடியாதவன்
வானம் ஏறி வைகுந்தம் போனானாம்”
என்ற சொலவடை ஒன்று தமிழில் சொல்லப் படும்.
இது எதற்காக?
இளமையை பருவக் கோளாற்றில் ஆழ்த்தி, கேடு கெட்ட நடத்தைகளில் நீந்துபவன் துன்பம் எனும் கரையைத்தான் அடைய முடியும்.
‘மனிதப் பிறவியே மற்றெந்த படைப்புக்களையும்விட மேலானது;உயர்ந்தது’ என்பதை உணர்ந்து,வளர்கின்றவனே பிறவிப் பயன் என்னும் கரையை அடைகின்றான்.
நமக்குக் கிடைத்துள்ள உயர் தகுதியான நிலையே ‘நாம் மனிதர்களாகப் படைக்கப் பட்டுள்ளோம்’ என்பதுதான். மிருகங்களுக்கோ,பறவை முதலான பிற உயிரினங்களுக்கோ.” நல்லது எது?கெட்டது எது? ”என்று சிந்தித்துச் செயல் படுகின்ற அறிவை இறைவன் தரவில்லை; எனவே அவை அனைத்தின் செயல்பாடுகளுக்கும் வினைப் பயனுக்கும் இறைவனேதான் பொறுப்பேற்றுக் கொள்கிறான்.இறைவன் வகுத்த வினைப்படி செயல்பட்டு முடிவில் அவை முக்தி பெறுகின்றன.
மனிதனுக்கு மட்டும் அவனவன் செயல்களுக்கு அவனவன் அறிவையே காரணமாக்கி வைத்துள்ளான். அந்த அறிவினால் அவன் தன்வினையையும் வினையின் முடிவான வினைப் பயனையும் யாதெனத் தெரிந்து கொள்ளும் வல்லமை இருந்தும் அதைப் பயன் படுத்தித் தன்னை நெறி படுத்திக் கொள்ளாது வளர்ந்து,வாழ்ந்து பின் எவ்விதம் வாழ்வின் அந்திமத்தில் நிம்மதி தேட முடியும்? வாழ்வின் நிம்மதியே
சொர்க்கம்.
இதை மானுடனுக்கு உணர்த்தவே இந்த ’வைகுந்த வாசல் திறப்பு’ என்கிற இறை நோன்பை நமக்கு நம் முன்னோர் உருவாக்கி,உணர்த்திச் சென்றுள்ளனர்.
‘மான சரோவர்’என்ற கயிலை யாத்திரைக்குச் செல்லும் நோக்கமும்,’புனித வெள்ளி’ கொண்டாடலும், ’ஹஜ்’ பயணமும், ‘வைகுந்த வாசல்’ திறப்பும் இந்த மானுடத்துக்கு, சொர்க்கத்தின் கதவுகளைத் திறக்ககூடிய ’திறவுகோல்’ இருக்கும் இடத்தை அடைவதற்கான பாதையைச் சொல்லும் நீதியே தவிர வேறு உண்மையல்ல.
ஓ மானுடனே…..
உலகின் எல்லா மதங்களும் மார்க்கங்களும் ‘சொர்க்கம்’ என்ற சொல்லைப் புறக்கணிப்பதே இல்லை;கவனித்தாயா?
நீ வாழும்போது,உனது அறிவையும் அகச் சான்றையும் முன் நிறுத்தி உனது செயல்களை வகுத்துக் கொள்வதன் மூலம் ’உனக்கு சொர்க்கம் சமீபத்தில் இருக்கிறது’ என்பதை உறுதி செய்து கொள்;
மானுட நேர்மையையும், மனித தர்மத்தையும் பின் பற்றாமல் போய்,பாதை தவறிய பயணம் செய்து விட்டுப் பின் உபாதை கொண்டு அழுவதாலும் ஆண்டவன் அடிபற்றித் தொழுவதாலும் என்ன பயன், நரகத்தை அனுபவிப்பதே உனது வினைப் பயன் என்பதைத் தவிர?
எனவேதான்,” “கூரை ஏறி,கோழி பிடிக்க முடியாதவன்;வானம் ஏறி வைகுந்தம் போனானாம்” என்கிற சொலவடை.
சொலவடையா இது?
அறிவார்ந்த அனுபவங்களின் ஆழமான வைகுந்த வார்த்தை.
இந்த வைகுந்த வார்த்தையின் கதவுகளைத் திறவுங்கள், நண்பர்களே!
அன்புடன் –
கிருஷ்ணன்பாலா
4.12.2012
4 comments:
"சாவில் இருவகை இருக்கிறது-ஒன்று சுத்த மரணம் மற்றொன்று அசுத்த மரணம்-ஒருவன் சுத்த மரணம் அடைகிறான் எனில் அவன் தன் சொந்ந ஜீவ தேகத்தில் குடியேறியவனாக ஆகிறான். அசுத்த மரணம் அடைபவன், அதி பாதக அலகை தேகத்தில் குடியேறியவனாக ஆகிறான். யோக்கியர்கள் னிறைந்நுள்ள இடத்தில் ஒரு அயோக்கியனை னுழைய விடுவார்களா? னுழைய விட மாட்டார்கள். யோக்கியர்களுக்கு மட்டும் அந்நத் தூமணிப் பதி திறந்நு இடம் தரும். அலகைத் தேகம் எடுத்தவன் ஒரு னாளும் அந்நச் சொர்க்கபதிக்குள் னுழைய முடியாது."
"திருனாள் - னமக்கு விடிந்ந னாட்களெல்லாம் உலகத்தவர்களுக்கும் விடிந்நன. ஆனால் அவர்களுக்குத் துக்கம், துயரம், கவலைதான் விடிந்நன.
இனி ஒரு னாள் அதாவது மனிதனைத் தேவனாக்கிய ஓர் இரவு னமக்குப் பிறப்பிக்கப்பெற்றது. அந்ந இரவில் வேதங்ஙளெல்லாம் விரிக்கப்பெற்றது. அன்னாள் வேத சூரியன் உதித்தெழுந்ந னாள்; வேதாந்ந ரகசியங்ஙளை வெளியாக்கி னின்ற னாள்; முன்பின் இல்லாத னாள்; அஞ்ஞானக் கிழங்ஙை வேரோடு எடுத்து எறிந்நு விட்டு மெய்ஞ்ஞான விருட்சத்தை னம் உள்ளத்தில் ஊன்றி வளர்வித்த னாள்; என்றென்றைக்கும் மகிழ்ச்சியே பிறங்ஙும் னாள்...
திருனாள், திருனாள் என்று வாயில் சொல்லிக் கொண்டு லைலத்துல் கதிர், சிவராத்திரி, வைகுந்ந ஏகாதசி என்று பேர் வைத்துக் கொண்டு அன்னாட்களில் கண் விழிக்கிறார்கள்; பட்டினி கிடக்கிறார்கள் - பலனுண்டோ? இல்லை; பாவங்ஙளையே திரட்டித் தலையில் சுமத்திக்கொள்ளுகிறார்கள். துக்கத்திற் குள்ளேயே மேலும் மேலும் னுழைகிறார்கள். அங்ஙனம் செய்து, தேவர்கள் தூஷிக்கக் கூடிய இரவாக அதை ஆக்கிக்கொள்ளுகிறார்கள்."
அப்புறம் எதுக்குங்க வைகுண்ட ஏகாதேசியும் ”முழு இரவு”ஜெபங்களும்?பெருமாள் கோவில் படையெடுப்பு...?இச்சொல்வடை எதுகை மோனைக்காகவோ?பலர் புரியாமல் இதை தவறாக எண்ணுவதாக நீங்கள் பதில் தந்தால்...இது மூடநம்பிக்கையின் ஒரு கூறாகவே அமையும்.
இந்தப் பின்னூட்டம் ‘மெய்வழி அனந்தர்’ ஒருவரால் பதியப் பட்டதென எண்ணுகிறேன். அவர்தன் பெயரை இங்கு வெளிப்படுத்த விரும்பாதவராய் இருப்பினும் தனது உணர்வுகளைக் காட்டியிருப்பதற்கு.நன்றி.
நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
5.1.2012
Post a Comment