Monday, December 5, 2011

POKE என்பது.......























ண்பர்களே,

‘POKE' என்று  முக நூலில்  (Facebook) ஒரு  ‘சொடுக்கி’ இருக்கிறது.
அதன் பொருள் என்ன என்பதை  முகநூலில்  அநேக நண்பர்கள் புரியாமலேயே அதைச் ‘சொடுக்கி’    வருகிறார்களோ?’ என்று  நினைக்கத் தோன்றுகிறது.

ஏனெனில்,
நண்பர்கள் சிலர் எனது Face Book பக்கத்தை POKE
செய்தபோது அதற்குப் பதிலாக மரியாதைக்கு நானும்
ஒரு முறை Poke செய்தால்  மறுபடியும்
அவர்கள் அதையே திரும்ப Poke செய்கின்றார்கள்.

எனவே -
‘முகநூலில்  'Poke' என்ற சொடுக்கி இருப்பதன்
பயன் என்ன என்பதை நண்பர்கள் அறிந்து கொள்ள
வேண்டும்என்பதற்காக  என் விளக்கத்தை இங்கே
சொல்லி வைக்கின்றேன்:

நண்பர்களும் இதைப் புரிந்து கொள்வார்களாக!:

முதன் முதலில் ஒருவர் இன்னொருவர்பால் POKE
செய்தால்:
அது,
அவருடைய பதிவுகளைப் பார்த்து
அவரைச்  செல்லமாகக் கிள்ளும் நிலைக்குச் சமம்.

அவருடைய பதிவுகளுக்குத் தனது பார்வை
பட்டுக் கொண்டிருக்கிறது எனக் காட்டிக் 
கொள்வதாகவும் இந்த Poke பொருள் சொல்லும்.

முதன் முதலாக உங்களை ஒருவர் Poke
செய்து,பதிலுக்கு நீங்கள் Poke செய்தால்
அது:
அவருக்கு நீங்கள்உங்கள் அன்பைப் புரிந்து
கொண்டேன்’  என்று பதில் உணர்த்துவதாகும்.

ஆனால் -
அதற்குப் பிறகு Pokeக்கு Poke என்று
தொடரும்போது -
Pokeக்கு அர்த்தங்கள் அவரவர்
போக்குக்கேற்ப மாறுபடுகின்றன.

அவை எவ்வாறு எனப் புரிந்து
கொள்ள இதோ:

Poke என்றால்:
சிந்தனையில் நுழைவோரைக் ‘சுட்டுதல்’;
செறுக்கோடு எழுதுவோரை ‘தட்டுதல்
மந்தமாயிருப்போரைக் ‘குட்டுதல்’;
மனதுக்கினியோரைக்  ‘கட்டுதல்

அன்புக்குரியோரை ‘ஒட்டுதல்
அழைப்புக்குப் பதிலாக ’எட்டுதல்
வம்புத்தனமாக ‘முட்டுதல்
வரைமுறை இல்லாமல் ‘கொட்டுதல்

என்று-

எப்படி வேண்டுமானலும் பொருள் கொள்ளலாம்.
அது அவரவர் மனோ நிலையைப் பொறுத்த விஷயம்.

எனினும்,
Poke என்பதன்  போக்கைப் புரிந்து நீங்கள் கொண்டால் சரி.

இப்படிக்கு,
பொழுது Pokeஉடன்--
கிருஷ்ணன் பாலா
5.12.2011

3 comments:

moorthi said...

நல்ல இருக்குங்க ஐயா

சிவக்குமார் said...

அருமையான விளக்கம்

Unknown said...

இந்த தகவல் புரிந்துகொள்ளும்படி உள்ளது. இந்த தகவல் பதிந்ததற்கு நன்றி வணக்கம் அய்யா