Sunday, October 31, 2010

அறிவுடையோர் அறிக-1 (புதிய தொடர்)

அறிவார்ந்த நண்பர்களே,

வணக்கம்.

நமது நாட்டில்,தொன்று தொட்டுப் போற்றப் பட்டு வந்த ஞானக் கலைகளில் தலையாயது, ஜோதிட அறிவியல்.

உலகின் ஞானப் பொக்கிஷங்களில் ஒப்பற்றதும் காலக் கணிதத்துக்கு அப்பாற் பட்டதுமான இந்திய வேதங்கள் நான்கு
இந்த நான்குக்கும்கண் போன்றது,ஜோதிடம்என்று வேதங்களே சொல்கின்றன.

நமது வேதங்களை அறிவது; அவற்றின் கொள்கைகளைப் புரிந்து கொள்வது என்பதே மிகப் பெரிய அறிவுடைமை; அதற்கென்றுஞானம்வேண்டும்அதை 'ஒரு மொழியினருக்கும்,ஒரு இனத்தவருக்கும் உரிமை' என்று பேசி ஒதுங்கிக் கொள்வதும்,ஒதுக்கி விடுவதும் மூடர்களின் இயலாமை.

'வேதமும் வேதாந்த விஷயங்களும் ஆரியரின் சொத்துக்கள்என்பதாய் ஒரு மாயை உருவாக்கப் பட்டு அதைப் பரப்புவதும்பேசுவதும் அறிவு ஜீவித் தனமென்றும்;பகுத்தறிவு சார்ந்த விஷயமென்றும் பேசி சந்தோஷப்பட்டுத் திரியும் ஒரு கேனத் தனமான உணர்வு நம் தமிழர்களிடையே தொற்றுநோய் போல் தொடர்கிறது.

வேதங்கள் என்றாலும் வேதாந்தம் என்றாலும் நம் தமிழர் 
சிலருக்கு வேப்பங்காய் போல் கசக்கிறது; வெறிகொண்டு சீறுகிறார்கள்.

நம் வாயில்  நுழைய வில்லை என்பதற்காக நாம் இந்தியைப் புறக்கணித்தோம்.அப்போது ஏழை எளிய மக்கள் இருண்ட கண்டத்தில் வாழ்ந்திருந்த  காலம்,’தமில்பிரசங்கிகளுக்கு வசதியாகப் போயிற்று.

அன்று-
தமிழர்கள்,அவர்களின் பிரசங்கத்தை நம்பினர்.

இன்று-
அந்த ஏழைகளின் பிள்ளைகள் எந்த முன்னேற்றமும் இன்றித் தவிக்கின்றார்கள்.

நாம் முன்னேற்றத்தில் ஒரு 40 ஆண்டுக்காலம் பின் தங்கி விட்டோம்.
அந்தப் பிரசங்கிகளின் பிள்ளைகளோ, ‘இங்லிஷ் கான்வென்ட்டில் செகண்ட் லாங்குவேஜ்ஆக இந்தியைப் படித்து, பதவிகள் பெற்று, முன்னேறி,இன்று பில்கேட்ஸ்களுக்குப் பிரியா விடை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதையெல்லாம் இந்தஅறிவுஜீவிகள்கேட்பதாய் இல்லை.

இந்திய ஞானத்தின் சிறப்பான விஷயங்களை இங்கொரு தமிழன் எடுத்தியம்பினால், அது கெட்ட விஷயமாம்.

இந்தக் கேனத் தனத்தை என்னென்பது? இதைக் குறிப்பிடுவதற்குக்  
காரணம் உண்டு.

ஞானத்தையும் மெய்ஞ்ஞான அறிவியலையும் கொண்டு திகழும்ஜோதிட ஞானம்பற்றிய அறிவு கிஞ்சித்தும் இவர்களுக்குக் கிடையாது;அதைக் கேலி செய்ய மட்டும் அறிவு நம்மவர்களுக்கு;கடன் வாங்கியாவது கிடைத்து விடுகிறது.

நண்பர்களே,
முதலில் நமது சாத்திரங்களைக் கேலி செய்யும் மனப் பாங்கை மாற்றிக் கொள்ளுங்கள்; அடுத்து. இந்த  அரைவேக்காட்டுஅறிவாளிகளிடம் அடிமைப் பட்டுப் போய்விடாதிருக்க விழித்துக் கொள்ளுங்கள்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்; அப் பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்று வள்ளுவன் சொல்வதை உணருங்கள்;அந்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

'ஜோதிடம்பற்றிய அறிவு இல்லாமலேயே அதைக் கேலி செய்து பேசும்அறிவுப் பதர்களுக்கு. ஜோதிடம் என்பது யாது என விளக்கவும் இந்திய ஞானப் பொக்கிஷமான அதனைப் பற்றிய ஞானமின்றி, குன்றிப்போன பார்வை கொண்டு குத்தாட்டம் போடும் அவர்களது பேதமை பற்றி எடுத்துக் கூறவும், எந்தக் கலாசாரம், பண்பாடு இவற்றின் சாராம்சமாகப் பிறந்தார்களோ அவற்றைப் பழிக்கின்ற கொடும் பாவத்தை அவர்கள் செய்யாதிருக்கவும்கூர்வாள்எனும் எழுத்தாயுதத்தை எடுக்க நேர்கின்றது.

நமது ஞானப் பொக்கிஷங்களை அழிக்க நினைப்போர், தங்களிடம்
உள்ள சிந்தனை ஆயுதத்தைத் தீட்டிக் கொண்டு நம் எதிரில் வரலாம்; வரவேற்போம்.

முதலில் நாம் பகிரங்கப் படுத்திக் கொள்வது இதுதான்.

வேதங்களும் வேதாந்த விஷயங்களும் ஜோதிட அறிவியலும்இவர்கள் சொல்கின்றஆரியர்களானஅந்தணர்களின் அப்பன் வீட்டுச் சொத்தல்ல;அவை; அவை நம் நாட்டுச் சொத்து.

வேதம் சொன்னவர்கள் டைக்ரீஸ் நதிக் கரையிலிருந்து போலன்,கைபர் கணவாய் வழியாக கங்கை நதித்  தீரத்துக்கு வந்து குடியேறியவர்கள்என்று வசனம் பேசுவது பித்தலாட்டம்.

ஆரிய மாயை;ஆரிய சூழ்ச்சிஎன்று வாய் ஜாலம் பேசும் திராவிட மாயைக்கு மயங்கி, திராவிட சூழ்ச்சியில் மாட்டிக் கொள்ளும் இன்னொரு அறிவிலித் தனம்.

வரலாற்றுப் பின்னணியில்,தென் மேற்கு ஆசியாவிலிருந்து ஒரு பிரிவினர்  போலன்,கைபர் கணவாய் வழியாக இந்துப் பிரதேசம் என்கின்ற  இன்றைய இந்தியாவுக்கு  வந்து  குடியேறியிருக்கலாம்.

ஆனால், அவர்கள்தான் வேதங்களைப் படைத்தார்கள்; அவற்றுக்குச் சொந்தக்காரர்கள்என்று பேசுவதும் அதை நம்புவதும் மிகப் பெரிய மோசடி;மடமை. பூவியலுக்கும் மானுடவியலுக்கும் பொருந்தாத தகவல்கள்.

ஏறத்தாழ 2500 அல்லது 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பூவியலில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டு,பாதிக்கப் பட்ட மக்கள் பூகம்பப் பகுதியை விட்டு,புலம் பெயர்ந்து புதிய குடியேற்றத்தை நாடி,தேடிக் கிழக்கே வந்திருக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது.

அப்படி வந்தவர்கள், இமயத்தின் அடிவாரத்தில் கங்கை நதியின் கரைகளில் குடியேறி அதைக் காலப்போக்கில் சுவாதீனம் செய்து கொண்டார்களே யன்றிஅவர்கள்தான் வேதத்துக்கு உரியவர்கள்;அவர்கள் மொழியே சமஸ்கிருதம்என்று எவர் சொன்னாலும் அல்லது சொல்லியிருந்தாலும் அது ஒரு மாயையே தவிர மாண்பு மிக்க விஷயமல்ல!

ஆரியர்களே வேதத்தைப் படைத்தார்கள்என்று சொல்வதுநம் அம்மை இன்னொரு அப்பனிடம் குழந்தை பெற்றுக் கொண்டாள்என்று கூறுகின்ர கூறு கெட்டத் தனம்.

எந்த வரலாற்றுக்காரனாவதுவேதங்களை ஆரியர்கள்தான் இயற்றினார்கள்' என்று சொல்லியிருந்தால் அவன் நிச்சயம் கலப்பினக்காரனாகத்தான் இருப்பானேயன்றி, நம் நாட்டின் அசல் வித்தாக இருக்க முடியாது.

தென் மேற்கு ஆசியாவிலிருந்து வந்தவர்கள் ஆரியர்களாகவே இருக்கட்டும்; ‘எப்படி ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் சமஸ்கிருதம்பாலி மொழிகளில் அவர்கள் தேர்ந்து வேதங்களை உருவாக்கி இருக்க முடியும்?’ என்று எந்தத் திராவிடப் பிரசங்கியாவது சொல்லட்டும், ஆதாரத்தோடு.

இங்கு வந்த ஆரியர்கள் தென் மேற்கு ஆசியாவில் வாழ்ந்த அறிவு ஜீவிகள்.இதைக் கீழ் காணும் விளக்கங்கள் மூலம் தெளிவாக உணரலாம்:

1. தங்கள் வாழ்விடம் பூம்பத்தினால் பாதிக்கப்பட்டதும்தாங்கள் வாழ்வதற்கேற்ற பகுதி வேறு எங்கு இருக்கிறதுஎன்பதைத் தங்கள் மதியூகத்தினால் கண்டுணர்ந்து இந்தியாவுக்கு வந்தது;

2. இந்தியப் பகுதிக்குச் சென்றால், அங்குவாழ்வதற்கும் நிலைப்பதற்கும் மக்களிடையேயும் மன்னர்களிடையேயும் மிக உன்னதமான இடத்தைப் பெற முடியும்என்கிற தன்னம்பிக்கை கொண்டிருந்தது;அதற்கேற்ற அறிவும் ஞானமும் அவர்களுக்கு இருந்தது.

3. பூகம்பத்தால் பாதிக்கப் பட்டதைத் தொடர்ந்து அவர்களை இங்கு வரவழைத்து அடைக்கலம் கொடுத்ததே நமது இமாயலயத்தில் லயம் கொண்டிருந்த ரிஷிகள்தாம். இமயச் சாரலில் வாழ்ந்து கொண்டிருந்த அவர்கள்,தங்கள் ஞானத்தினாலும் மேதைமையினாலும் தாங்கள் உணர்ந்திருந்த வேத அறிவை உள்வாங்கிக் கொண்டு, உரிய வகையில் காத்து, ‘அவற்றை இந்தியா முழுவதும் மக்களிடையே பரப்பும் ஞானமும் மனோதிடமும் உள்ளவர்களாகஇந்த ஆரியர்களை, அந்த ரிஷிகள் ஏற்றுக் கொண்டது

4. அதற்கேற்ப நமது ரிஷிகளின் கருணைக்கும் இரக்கத்துக்கும் பாத்திரமானவர்களாகவும், அறிவுடையவர்களாகவும் அந்த ஆரியர்கள் இருந்துள்ளனர்.

5. இங்கு வந்து குடியேறிய ஆரியர்களைக் கங்கை நதி தீரங்களில் பரவலாகக் குடியேற வைத்த  ரிஷிகளின் கருத்தை நடைமுறைப் படுத்தியது ஆங்காங்கே கோலோச்சிய மன்னர்கள். காரணம்,நமது ரிஷிகளின் சொல்லையும் எண்ணங்களையும்  நமது மன்னர்களும் மக்களும் தெய்வக் கட்டளையாக ஏற்றுக் கொண்டு செயல்பட்ட கால கட்டம் அது. அதன் அடிப்படையில், அந்த ஆரியர்களுக்குத் தேவையான மரியாதை மற்றும் வாழ்வதற்குரிய வசதிகளை எல்லாம் செய்து கொடுத்தது அன்றைய நிலையில் பரிபாலிக்கப் பட்ட ராஜ நீதியாகவும் இருந்தது.

6. அவ்வாறு குடியேறிய ஆரியர்கள்,தங்கள் அறிவு நுட்பத்தாலும், பணிவினாலும், பக்குவமான அணுகுமுறைகளினாலும் மிகக் குறுகிய காலத்தில் மன்னர்களிடத்திலும் உயர் மரியாதையைப் பெற்றதுடன் தாங்கள் வாழ்ந்த பகுதிகளை, மிகக் குறுகிய காலத்தில் சொந்த மண்ணாகச் சுவீகாரப் படுத்திக் கொண்டதும் அன்றைய நிகழ்வுகளாக இருந்திருக்கின்றது.

7. இதற்கெல்லாம் அடிப்படையாக, நமது ரிஷிகளின் வாழ்வியல் முறை மற்றும் மனிதர்களுக்கு அவர்கள் அருளி வந்த உபதேசங்களில் இந்த ஆரியர்களுக்கிருந்த பற்றுதல்;நாட்டம் முதலானவை முக்கியமான காரணங்கள்.மன்னர்களும் மக்களும் இறைவனின் பிரதிநிதிகளாக நமது ரிஷிகளைப் பாவித்து,அவர்கள் சொல்வதே வேதவாக்குஎனக் கொண்டு செயல்பட்டது,அதன் தொடர்புக் காரணங்கள்.

8. நமது ரிஷிகளைப் பற்றிய ஞானமும் பக்தியும் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே  மேற்கு ஆசியாவில் பரவி இருந்தது;அதற்கான ஆதாரத்தை, கிறித்துவர்களின் புதிய ஏற்பாட்டு மூலமே எடுத்துக் கூற முடியும். கூறுவோம். (மத உணர்வு கொண்டு இக் கருத்தை எதிர்த்து இப்போதைக்குத் தடுமாறி, எவரும் விழுந்து விட வேண்டாம்; நானே அடுத்து எழுதுவேன்;அப்போது மறுத்து எழுத முனைவோர் எழுத வரலாம்) இந்த ஆரியர்களுக்கு அப்போது  மேற்கு ஆசியாவில் நிகழ்ந்த பிரளயமும் அங்கு ஏற்பட்டு வந்த சித்தாந்தப் போதனைகளும் அங்கிருந்த அரசர்களின் புதிய சித்தாந்த ஈடுபாடும் வருத்தம் தருவனவாய் இருந்திருக்க வேண்டும்.அதே சமயம் மேற்கு ஆசியாப் பகுதியில் வாழ்ந்து வந்த இந்த ஆரியர்களுக்கு இமயச் சாரலில் வாழ்ந்த ரிஷிகளின் சித்தாந்தங்களில் நாட்டம் மிகுந்திருந்திருக்கவும் காரணங்கள் உண்டு. இவற்றின் தொடர்புகளால் அவர்கள், அந்தப் பிரளய காலத்தைக் காரணமாகக் கொண்டு இந்தியாவை நோக்கி வந்ததே உண்மையாக இருக்க முடியும்.

9. அந்தக் கால கட்டத்தில்  புனிதமிக்க இந்த முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் கீழ்ப்படிந்தே  மன்னர்களும் ஆட்சிசெய்து வந்ததால்இந்த ஆரிய மக்களுக்கு அந்த ரிஷிகளின் ஆக்ஞைப்படியேஉற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றிடவைத்தனர்நம் நாட்டு மன்னர்கள்மக்களும் மன்னர்களின் ஆணைப்படியே நடந்து இந்த ஆரியர்களின் அறிவுப் பணிகளுக்குக் கீழ்ப்படிந்து ஆரியர்களுக்குத் தனி மரியாதை செலுத்தி வந்தனர்.  ‘மன்னர் எவ்வழி மக்களும் அவ்வழிஎன்பது நம் முன்னோர் சொன்ன முது மொழியல்லவா?

இவ்வாறாகத்தானே அந்த ஆரியர்கள் குடியேறிய விதமும் அவர்கள் இந்திய மண்ணில் ஒன்றிப் போனவர்களாய் மாறிய  நிலையும் அன்றைய வரலாறாக இருக்க முடியும்?

வாழ்க்கையில், சொந்தப் பூமியை இழந்து,கைப் பொருள் இழந்து உற்ற உறவுகளை இழந்து, வேற்று மண்ணில் வாழ்வதற்குக் கொஞ்சம் இடமும் வாய்ப்பும் கிடைத்தால்,அகதியைப் போல் இருக்கும் அறிவுள்ள மனிதன் என்ன செய்வான்?

ஒரு புதிய சமுதாயத்தையே உருவாக்கி, அறிவினால் ஆகும் அத்தனை சாதனைகளையும் தோற்றுவிப்பானா அல்லது தோற்றுப் போவானா?

முக்காலத்தையும் அறிந்த அந்த வேத காலத்து முனிவர்களுக்குஆரியன்என்றும்,ஆரியன் அல்லாதவன்என்றும் பேதம் இருக்க முடியுமா?

வாழ்விழந்து தவிக்கும் மக்களை அவர்கள் கைவிட்டு விடுவார்களா?கருணை மிகும் இறை நேசர்களான நம் ரிஷிகள் அவர்களுக்குஅந்த ஆரியர்களுக்கு கருணைக் கரம் நீட்டி, அவர்கள் வாழ்வதற்கு வழிகாட்டி, தாங்கள் பெற்றிருந்த ஞானமாம் வேத அறிவைப் போதித்தனர்.

காலத்தின் கட்டாயமும்,ரிஷிகளின் கருணையும் அந்த ஆரியர்களை வெகு நுட்பமாக,வெகு விரைவாக அனைத்தையும் கற்றுக் கொள்ள வைத்து. ஆரியர்கள் அந்தக் கங்கைக் கரையில், கரையிலா அந்த ஞானங்களைக் கற்றுத் தேறினர்.

பற்றற்ற அந்த இமயச் சாரலின் ரிஷிகள்,தங்களைப் பற்றிப் 
பணிந்து, கற்றுத் தேறிய இந்த ஆரியர்கள், காலத் தேவையினாலும் ரிஷிகளின் எண்ணப்படியும்  மன்னர்களுக்கும் மக்களுக்கும் ராஜ குருக்களாகினர்

முக்காலமும் அறிந்த ரிஷிகளோ,தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ளாமலேயே இமயச் சாரலில் தவத்தின் மூலம் இறைவனிடம் ஒன்றியிருத்தலிலேயே நாட்டம் செலுத்தினர்..



அறிவுள்ளவன் ஆரியன் ஆனான். ஆதங்கப்பட்டவன் திராவிடன் ஆனான்.

அந்த ஆரியக் கூட்டத்தினர் மக்களுக்கும் மன்னர்களுக்கும் நல்லதை எடுத்துச் சொன்னால்,அதைப் புரிந்து கொள்ளாமல் புழுங்கியவர்கள் போய்ச் சேர்ந்த இடம்  ‘திராவிடம்’.

நம் ஏழை,எளிய மக்களைக் கற்றுக் கொள்ள விடாமல் அவர்களுக்குத் துர்ப் போதனை செய்யும் சூது மதியாளர்களே உண்மையான திராவிட இனத்தின் எதிரிகள்….

(எடுத்துச் சொல்வோம்....
அடுத்து ....>அறிவுடையோர் அறிக,தொடர் -2 காண்க.........> .
-கிருஷ்ணன் பாலா
 31.10.2010 / 06:44 am

14 comments:

Dhavappudhalvan said...

அருமையான பதிவு. இதற்கு முறையான வகையில் வாதிடக் கூடியவர்கள், கருத்துகளைப் பதித்தால் மேலும் மெருகேறும்.

S.Saravanan said...

This is article will the enlightened the people who are languished by narrow minded politican,and light the lamp in the heart of millions of youth so that they can change the world.

Good Krishnan Balaa Sir, you are the real social reformer.

My Medition and superconscious mind power will provide you enoromous strength to write this kind of article more and more to wake up the youth.

Hats off to you

By

Saravanan

Mind and Communication Trainer

Saran_britt@yahoo.co.in

ulagathamizharmaiyam said...

நன்றிகள்.திரு தவப் புதல்வன் மற்றும் ‘சரண்’ சரவணன்...ஆகியோருக்கு.

Unknown said...

வாழ்த்துகள் அன்பரே...தமிழினத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் தமிழினத் துரோகிகளுக்கு விட்ட சாட்டையடி மிக்க அருமை...!

ulagathamizharmaiyam said...

திரு.சிவா அவர்களுக்கு நன்றி.
தமிழினத்தின் முன்னேற்றத்துக்குத் தடைபோடும் சித்தாந்தங்கள் எதுவாயினும் அதை அடையாளம் காட்ட வேண்டியது நமது கடமை.

LN Mahesh said...

தங்கள் குறுந்தொடர் படிக்க விறுவிறுப்பாக இருக்கிறது. பிரபலமான தலைப்பு, பிரச்னையான விஷயங்கள். தொடர் வெற்றியடைய வாழ்த்துக்கள்

ulagathamizharmaiyam said...

உண்மைதான் திரு.மகேஷ்,
பிரச்சினைக்குரிய விஷயத்தைக் கையாளுகின்றேன்.

ஆனால் பிரச்சினைஎனக்கல்ல,
”ஆரியர் என்றும் திராவிடர்” என்றும்,இந்திய மக்களைப் பிரித்து அரசியலுக்காகவும்;சுய ஆதாயத்துக்காவும் அரைவேக்காட்டுத் தனமாக எழுதியும் பேசியும் வருகின்றவர்களுக்கு.

Unknown said...

திடமான சோதிடம்….
யாம் கொண்ட கருத்திற்க்கு முற்றிலும் உடன்படில்லை என்பதாலும்,இது குறித்து அறிவுஇல்லை என்பதாலும் முதலில் கவனதிற்க்கொள்ளவில்லை, ஆனால், நான் குறிப்பிட்டபடி ஒர் கருத்து பொதுவில் வைக்கப்பட்டால் விமரிசிக்க வாசகனுக்கு உரிமையுண்டு,பொது என்பதில் நானும் உட்படுவதால் உள்ளே வருகிறேன்,சோதிடம் என்பது எதிர்வரும் காலத்தை அதை கடந்து போகிறவனுக்கு முன்கூட்டியே உணர்த்துவதாய் அவன் எதிர்கொள்ளபோகும் சாதக பாதகங்களை எச்சரிப்பதாகவும் அல்லது எல்லா இடையூறுகளையும் எதிர்கொள்ளவும் ஏன் இல்லாமல் ஆக்கவும் அதிலிருந்து திசைமாறிப்போகவும் அல்லது அவைகளை திசைமாற்றி போகவைக்கவும் வாழ்வியலில் உட்பட்ட திருமணம் வியாபாரம் கல்வி வேலைவாய்ப்பு வாழ்வு மரணம் இன்னும் என்னென்ன உண்டோ அதனையும் எந்த தடையும் இன்றி நடக்கவும் வழிகாட்டும் சுருங்கச்சொன்னால் ஒர் மனிதன் பிறந்தது
முதல் மரணிக்கும்வரையிலான எல்லாவற்றிர்க்கும் தீர்வு காண இயலும் என்பதாகத்தான் இன்றுவரை கருத்தாக்கம் ஆக்கப்பட்டிருக்கிறது இங்கனமெனில் இதில் பகுத்தறிவாளிகளுக்கு? மட்டும் அல்ல பாமர அறிவாளிகளுக்குள்ளும் கேள்விகளை தோற்றுவிக்கும் இங்கனம்தான் என்றால் இதில் விமரிசிக்கவோ கருத்து சொல்லவோ ஒன்றும் இல்லை உடண்படுள்ளவர்கள் ஏற்று நடப்பதில் எமக்கொன்றும் ஆட்சேபணை இல்லை அல்லாது மாற்றம் உண்டாகுமெனில் தோழர் கருக்கொண்டுள்ளார் அதற்க்கு என்ன உரு கொடுக்க உள்ளார் என்று காணத்தான் காத்திருக்கிறோம்.அவரது தலைப்புக்கான கேள்வி மட்டுமே,பின் தொடர்வோம்.

V.Rajalakshmi said...

//அறிவுள்ளவன் ஆரியனானான். ஆதங்கப்பட்டவன் திராவிடனானான்.

அந்த ஆரியக் கூட்டத்தினர் மக்களுக்கும் மன்னர்களுக்கும் நல்லதை எடுத்துச் சொன்னால்,அதைப் புரிந்து கொள்ளாமல் புழுங்கியவர்கள் போய்ச் சேர்ந்த இடம் திராவிடம்.//
அருமையான பதிவு,
நல்ல உண்மையான வார்த்தைகள் இதை ஆதங்க திராவிடன் ஏற்று கொள்வானா?

திராவிடன்,திராவிடன் என கூறி பொறாமையை மட்டுமே விதைக்கும்
"திராவிட குழுமங்கள்" கூடி கூடி குழுக்களை உண்டாக்கி பாதாள குழியை வெட்டியாக வெட்டி வைக்கிறது...

V.Rajalakshmi said...

//நம் வாயில் நுழைய வில்லை என்பதற்காக நாம் இந்தியைப் புறக்கணித்தோம்.

அப்போது ஏழை எளிய மக்கள் இருண்ட கண்டத்தில் வாழ்ந்திருந்த காலம்,’தமில்’ பிரசங்கிகளுக்கு வசதியாகப் போயிற்று.

அன்று-
தமிழர்கள்,அவர்களின் பிரசங்கத்தை நம்பினர்.

இன்று-
அந்த ஏழைகளின் பிள்ளைகள் எந்த முன்னேற்றமும் இன்றித் தவிக்கின்றார்கள்.

நாம் முன்னேற்றத்தில் ஒரு 40 ஆண்டுக்காலம் பின் தங்கி விட்டோம்.

அந்தப் பிரசங்கிகளின் பிள்ளைகளோ, ‘இங்லிஷ் கான்வென்ட்டில் செகண்ட் லாங்குவேஜ்’ஆக இந்தியைப் படித்து, பதவிகள் பெற்று, முன்னேறி,இன்று பில்கேட்ஸ்களுக்குப் பிரியா விடை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


இதையெல்லாம் இந்த ‘அறிவுஜீவிகள்’ கேட்பதாய் இல்லை.//

இன்றும் தன் பிள்ளைகள் பேரபிள்ளைகள் தமிழில் மதிப்பெண் 40 அல்லது 50 சதவீதம் எடுப்பினும்!அதில் கவனம் இல்லாமல் இந்தி பேசுவதை,படிப்பதை தனியாக பணம் கட்டி படிக்கவைக்கும் சிலர்
மேடை ஏறி, கூடி பேசும் பொய்
இந்தியை மட்டம் தட்டி பேசி,தமிழை தட்டாமல் கீழே தள்ளுவது...

V.Rajalakshmi said...

வட நாட்டில் அல்லது வெளி நாட்டில் வாழும் அல்லது வசிக்க சென்று திரும்பும் தமிழர்களின் சந்ததிக்கு தமிழ் தெரியாது அப்படியே தெரிந்தாலும் உடைந்த தமிழ் இதற்கு காரணம் அவர்களின் பெற்றோர்களின் தம்பட்டம் "ஹையோ அவனு/ளுக்கு தமிழே வராது" [பீத்தகளையனுங்க என சொல்லும்படியான பைத்தியங்க]

sammatti said...

அய்யா!ஜோதிடம் கலையா?எப்படி?இயல்,இசை,நாடகம் போன்றா?குறைந்த விலைக்கு ஒரு பொருளை வாங்கி அதை அதிக விலைக்கு விற்பவன் போலா?அது அவனின் கைதேர்ந்த கலை அல்லவா?மனிதனின் அறியாமையை மூலதனமாகக் கொண்டு அவனி நல் வழிப்படுத்த முனையாமல் அவனின் மூடநம்பிக்கையை முறையாக வியாபாரம் செய்வதற்குப்பெயர் கலையா?குஷ்புவின் குத்தாட்டமும் கலைதானே?திரையுலகம் இன்று செய்யும் அந்த ஈனச்செயலுக்கு வக்கலத்து வாங்குபவர்களுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?மனிதனின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் எதுவும் ஈனச்செயலே!திராவிடம் என்பதில் உள்ள நிகழ்கால் ஓட்டையை அடைக்க ஜோதிடப்பூச்சா?அது திராவிடத்தைவிட கேவலமானது.திராவிடம் எனும் பெயரால் சுயநல சக்திகள் மக்களை சுரண்டியத்தை எதிர்க்கலாம்.அதற்காக மக்களை மூடர்களாக்க ஜோதிடத்தை விஞ்ஞானம் என்பதை எப்படி ஏற்கமுடியும்?விஞ்ஞானம் என்பது இரு வகைப்பட்டத்ற்குள் அடங்கவேண்டும்.1.பொருள் 2.உணர்ச்சி..அதாவது பார்க்க,கேட்க,உணரக்கூடியதாக இருக்க வேண்டும்.அதுவும் அவை மனிதத்துக்கு பொதுவானதாக இருத்தல் வேண்டும்.உதாரணமாக,வலி என்பதை சொல்ல முடியாது.ஆனால் அது எல்லாருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.இதில் ஜோதிடம் அடங்காது.ஏனென்றால் நீங்கள் சொல்லும் ஜோதிடமும் அதன் மீதான நம்பிக்கையும் அதற்கு துணைக்கழைக்கும் (மூடநம்பிக்கை)சாஸ்திரங்களும் மனிதர்களாக உள்ள நாத்திகர்கள் பலருக்கு உணர முடியாமல் இருப்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.நாத்திகர்கள் என்றால்,உடனே வீரமணி..திராவிடர்... என எண்ணவேண்டாம்.இது தவிர்த்த நாத்திகர்கள் பற்றியே என் கருத்து.இது பற்றிய விவாதத்திற்கு தயார்.எதுவும் விஞ்ஞானத்தை ஒட்டியே இருந்தால் நலம்.கற்பனையுடன் கூடிய மூடநம்பிக்கையுடன் இருந்தால் அது பலனளிக்காது.

goldenking said...

இந்தி படிப்பவர்களுக்கு எல்லாம் இந்தி பேசும் மாநிலங்களில் வேலை வாய்ப்புகள் திறந்து கி டந்தது போலவும்
இந்தி படிக்காததினால்தான் அதை எல்லாம் இழந்துவிட்டது போலும் பழைய காங்கிரஸ்க் காரர்களும் ஆரிய அடிவருடிகளும் போல நீங்களும் கருத்துக் கூறியிருப்பது வியப்பளிக்கிறது .இன்றைய இந்திக்காரர்கள் வேலை தேடி தமிழ் நாட்டில் குவிந்துள்ளார்கள் என்ற உண்மையை உணருங்கள் .அவர்கள் தமிழ் படித்து விட்டு வரவில்லை என்பதயும் பிழைப்பு தேடிச் செல்லும் ஊரின் மொழியைக் கற்றுக் கொள்வதும பிழை ப் புக்காக கற்றுக்கொள்ள முடியும்என்பதை இங்கு வாழும் மார்வாடிகளி டம் இருந்து தெரிந்து கொள்ள மறுப்பவர்களின் மன நிலையை என்ன சொல்ல ?

தனேஷ் இரத்தினசாமி said...

//அறிவுள்ளவன் ஆரியனானான். ஆதங்கப்பட்டவன் திராவிடனானான்.

அந்த ஆரியக் கூட்டத்தினர் மக்களுக்கும் மன்னர்களுக்கும் நல்லதை எடுத்துச் சொன்னால்,அதைப் புரிந்து கொள்ளாமல் புழுங்கியவர்கள் போய்ச் சேர்ந்த இடம் திராவிடம்!//

ஆரியக் கூட்டம் என்று தாங்கள் கூறுவது யாரை? பார்ப்பனரையா?

எனக்குத் தெரிந்தே ஆகவேண்டும்!
>>தமிழர் யார்? ஆரியர் யார்? ஒன்றா வேறா??
>>பார்ப்பனன் யார்? அவர் எந்த இனத்தவர்? அவர்கள் நம்மினத்தவரா இல்லையா?
>>வடமொழி யாருடையது? தமிழருடையதா இல்லையா?

நேரடியான பதில்கள் தாருங்கள்.