Sunday, November 17, 2013
'பாரத் ரத்னா’: குருவி தலையில் பனங்காய்!
அறிவார்ந்த நண்பர்களே,
கடந்த சில மாதங்களுக்கு முன்பே ‘சச்சினுக்குப் ‘பாரத ரத்னா ’ விருது கொடுக்க வேண்டும்’ என்ற கோஷம் எழுப்பப் பட்டது.
அதன்பிறகு அந்தக் கோஷம் ஏனோ அமுக்கப்பட்டு, அமைதியாகி,
திடீரென இப்போது சச்சினை ‘பாரத ரத்னா’ என்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் அறிவித்திருப்பது, சமீபத்தில் அவருக்கு
காங்கிரஸ் சார்பில் கொடுக்கப்பட்ட ‘ராஜ்ய சபை உறுப்பினர் என்ற கௌரவம் குறைவு’ என்று கருதிக் கொண்டிருப்பதையே
காட்டுகிறது.
ஆக, நாட்டின் மாநில எல்லைகளைக் கடந்து பல லட்சம் இளைஞர்-இளைஞிகளால் கொண்டாடப்படும் ஒருவரைக் காங்கிரஸ்காரராக்கி MP பதவி வழங்கி, அதன் பின் சில மாதங்களில் அவரை இப்போது ‘தேசியச் சொத்து’ என்பதுபோல் காட்டி, அவரை ஓட்டு வங்கியை நிரப்புப்புகின்ற
இழிநிலைக்குக் கொண்டு செல்ல எத்தனித்திருக்கிறது காங்கிரஸ்.
ஊழலில் ஊறிப்போய். நாட்டில் நாறிக் கொண்டிருக்கிற காங்கிரஸ்,
தனது வெட்கங் கெட்ட மலிவான விளம்பர உத்திக்கு இன்று ’பாரத் ரத்னா’வைப் பயன் படுத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை..
இந்தப் ‘பாரத ரத்னா’ மூலம் ‘அப்துல்
காலமும் சச்சினும் ஒரே தரம்’ என்ற ஆனபிறகு, இனி, பொதி சுமக்கும் கழுதைக்குக் கூட இதை வழங்கினாலும் நாம்
ஆச்சரியப்படப் போவதில்லை
கிரிக்கெட் என்ற விளையாட்டு ஒரு சூதாட்டம் நிறைந்தது. கிரிக்கெட் போர்டு தலைவர் பதவியை அடைவது முதலாய் அணியில் இடம் பிடித்து ஆடுவதுவரை அனைத்திலும் பணமும் அதிகாரச் செல்வாக்கும் புகுந்து, லஞ்சம் ஊடுருவி நிற்கும் தனியார் அமைப்பின் ஊழல்துறை இது’ எனது அறிவுடையோர் அறிவர்;முட்டாள்களுக்குப் புரியாது..
நமது
இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் அநாகரிகமான தோற்றங்களையும் ஆர்வத்தையும்
தூண்டி இருக்கிற ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியாகத்தான்
இந்தக் கிரிக்கெட் இருக்கிறதே தவிர, தேசத்தின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் ஒருபோதும் தூக்கி
நிறுத்துகிற விளையாட்டாக இதை ஒரு தொண்டு நிறுவனமோ தூய்மையான
கொள்கைகளைக் கொண்ட அமைப்போ கையில் எடுத்துக் கொண்டு நடத்தவில்லை.
’கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு ’என இப்போது பலரும் புகாருக்கு ஆளாகிச் சிரிப்பாய்ச் சிரிக்கும்
இந்த விளையாட்டில் மிகப் பெரும் கோடீஸ்வரானாய்த் திகழும் சச்சின், எப்பொழுதும்
சுயநலமாகப் பெயரெடுக்கவும் சாதனைப் பட்டியலை வளர்த்துக்
கொள்ளவும்தான் தன் திறமைகளையும் புகழையும் பயன்படுத்தினாரே தவிர , ஏழை, எளியவருக்கு ஒரு சல்லிக்காசைக் கூட மனமுவந்து தானம் செய்ததாகத் தகவல்கள் வந்ததில்லை.
இந்த நிலையில் இந்தப் பாரத் ரத்னாவுக்காக அவர் என்னமாய்ப் பாடுபட்டிருப்பார்? என்பதும் சொல்லாமல்
விளங்குகிறது, நமக்கு.
பாகிஸ்தானின் புகழ் பெற்ற கிரிகெட்
வீரர்/கிரிக்கெட் குழுக் கேப்டனாகத் திகழந்த இம்ரான்கான் 100
கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து பாகிஸ்தானின் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும்
மருத்துவ மனையைக் கட்டி இருக்கிறார்.
அவருடைய அறச் சிந்தனைக்கும் சச்சினுக்கும் நேர்
எதிர்மறையான குணாதியசங்கள்.
மும்பையில் மட்டும் ரூபாய் 100 கோடி மதிப்புக்கும் மேலான சொகுசுப் பங்களா கட்டி அதில் தனது மனைவி குழந்தைகளைக் குடி வைத்து, குஷியாக குடித்தனம் நடத்தும் அவரிடம் கணக்கில் வாராத கோடிகளும் உண்டு.
அவரது வருமான வரித் தாக்கல் எவ்வளவு என்பது தெரிந்தால் வருமானம் காட்டாத சொத்து எவ்வளவு இருக்கும் என்பது விளங்கும். அத்தனையும் கிரிகெட் விளையாட்டில் கொட்டிய பணம் மட்டுமல்ல அதையும் தாண்டி விளம்பரங்கள் மூலமும் நிதி முதலீடுகள் மூலமும் பல்கிப் பெருகிய பணம்.

சச்சின் நாட்டுக்கு என்ன செய்தார்? சச்சின் சம்பாதித்த
பணம் சூதாட்ட்த்தில் சம்பந்தப்பட்டது என்று நாளை ஒரு புகார் எழுந்து ’அதுபற்றிய சர்ச்சைகள் கிளம்பாது’ என்பதற்கு என்ன உத்தரவாதம்?
கிரிக்கெட்டில் கிறுக்குப் பிடித்துப்போய்
சச்சினை கிரிக்கெட் கடவுள் என்ற அளவுக்கு உளறுகின்றவர்களும் சச்சினுக்குப் பாரத
ரத்னா வழங்குவதில் புளகாங்கிதம் கொள்வோரும் இது பற்றி என்ன சொல்வார்கள்?
சரியான கோணத்தில் புலன் ஆய்வு நட்த்தினால் தாவூத் இப்ராஹீமும் சச்சினும் எங்கேனும் ஒரு நேர்க்கோட்டில் நிற்கத்தான் செய்வார்கள். ஏனெனில் ‘தாவூத் இப்ராஹீமை மீறி இன்று கிரிக்கெட் விளையாட்டில் சூதாட்டத்தை எவரும் நடத்த முடியாது’ என்பது உலக ரகசியம்.
’பாரத் ரத்னா’ என்னும் உயர் தரவிருது உன்னதமான நோக்கங்களின் அடிப்படையில்
உருவாக்கப்பட்டது.
இந்தியாவை உன்னத நிலைக்குக் கொண்டு வரும் சிந்தனைகளில் செயல்பாடுகளில்
தனித்து நின்று சாதித்துக் காட்டிய உத்தமர்களுக்கு
வழங்கப்பட வேண்டிய உயர் விருது இது.
முதிர்சியும் அனுபவமும் புகழும் நிறைந்தவர்களுக்கு இதை வழங்கிப் பெருமை கொள்ள வேண்டிய இந்திய நடுவண் அரசு, வயது 40 ஐக் கூட்த் தாண்டாத ஒருவருக்கு 100 ஆண்டுச் சாதனைபோல்
கருதி ‘பாரத ரத்னா’வைச் சூடி மகிழும் சிறுமையில் சிக்கிக் கொண்ட்து.
சிறுமதி கொண்ட ராகுல் போன்றவர்களின் குணத்தைத்தான் இது பிரதி பலிக்கின்றதே ஒழிய ஆழந்த சிந்தைனையையும் அறிவுப்பூர்வமான
முதிர்ச்சியையும் அல்ல..
இன்னும் பல ஆண்டு காலம் வாழ்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிப் பாடாப் படப் போகும் சச்சினுக்கு, அரசியல் உள் நோக்கம் நிறைந்த இந்தப் ‘பாரத் ரத்னா’ பெரும் அவமானத்தைத்தான் பின்னாளில் தரும்.
எழுதி வைத்துக் கொள்ளுங்கள்: குருவி தலையில் பனங்காய்!
இவண்-
கிருஷ்ணன்பாலா
17.11.2013
Thursday, November 14, 2013
எனது ஆத்திச் சூடி!
ஆத்திச் சூடி அவ்வை சொன்னாள்;
அவளென் பாட்டி; அவள் மொழி கொண்டு
யாத்திடும் இதுவும் அஃதே என்று
ஏற்போர் என்றன் தமிழ்க் கேளிரே!
-------------------------------------------------
அறத்தமிழ், நாடு;
ஆரியம் பேசேல்;
இறைநெறி உணர்;
ஈனரை விலக்கு;
உலகததில் ஓங்கு;
ஊருடன் வாழ்;
எதிரியை வீழ்த்து;
ஏய்த்து உண்ணேல்;
ஐயம் கொள்ளேல்;
ஒன்றே இறை;
ஓடி ஒளியேல்:
ஒளவை சொல் கேள்;
அஃதே வாழ்க்கை!
இவண்-
கிருஷ்ணன்பாலா
14.11.2013
Wednesday, November 6, 2013
Tuesday, November 5, 2013
தேடல்:2
தா’ என்று யாரிடத்தும் தாழாத மனமும்
‘சீ’என்று ஒருவரையும் சினவாத குணமும்;
‘போ’ என்று சொன்னால் உயிர் போகின்ற நிலையும்
‘தா’வென்றே பணிந்தேன்நான்;தந்தருளென் குரு நாதனே!
தேடுகின்ற பொருட்களிலே தெளிந்த ஞானம் கொண்டும்;
வாடுகின்ற மனதில் ஒரு வாட்டம் நேரும் என்றால்;
வருத்தம் போக்க உலகிலென்ன மார்க்கம் உண்டு;சொல்க!
விதி வழியே வாழ்க்கை என்று நம்புகின்றபோது;
வேறு வேறு திட்டங்களைத் தீட்டி விதியை இங்கு
மதிவழியே காணுகின்ற மனதைக் கண்டு கொண்டு
மயங்கின்றேன்;தயங்குகின்றேன் குழப்பம் அகலவில்லை!
ஊருக்கெல்லாம் சொல்லுகின்ற அறிவுரைகள் வழியே
உண்மையாக வாழ்ந்து நிற்கும் உறுதி இங்கு தேடி
பாருக்கெல்லாம் காட்டுகின்ற நேர்மை கொண்ட நெஞ்சம்
படைத்திடாத போதில் ஞானம் எங்கு கூடும்: சொல்வீர்?
தன்மனதை அறிந்திடாது தத்துவங்கள் சொல்லி;
தமிழை இங்கு கெடுப்பதற்கா இங்கு கூட வேண்டும்?
புன்மையான பொய்யறிவைப் போற்றிடாது இங்கு
பொய்களோடு வாழ்ந்து விட்டுப் போகும் பாதை எங்கு?
-கிருஷ்ணன்பாலா
5.11.2013
Sunday, November 3, 2013
காமன் வெல்த்தும் காமன் சென்ஸும்!
அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.
இலங்கையில் நடைபெறவுள்ள ‘காமன் வெல்த்தில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது’ என்கிற அயோக்கியத்தனமான அரசியல் எதிர்ப்புப் போராட்டத்தைச் சிலர் நடத்தி வருகின்றனர்.
இவர்களின் கூற்றுப்படி இந்தியா கலந்து கொள்ளாமல் போனால்,இவர்கள் கூவுகின்ற அரசியல் சுதந்திரம் இலங்கைத் தமிழர்களுக்குக் கிடைத்து, இதுவரை இலங்கைத் தமிழருக்கு எதிராக இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட வன் கொடுமைகள், பலாத்காரம், கற்பழிப்பு, கண்மூடித்தனமான இழிசெயல்கள் அனைத்துக்கும் தீர்வாகி விடுமா?
கொஞ்சம்கூட ‘காமன் சென்ஸ்’ இல்லாத அரசியல் பித்தலாட்டப் பித்து இது.
தமிழ்நாட்டில் இருக்கிற ஏமாளித் தமிழ் உணர்வாளர்களிடையே தாங்கள்தான் தமிழர்களின் உரிமைக்குப் போராடும் உண்மையான அரசியலை முன் வைக்கின்றவர்கள்’ என்று கூறிக் கொண்டு, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுக்களை வளைக்கின்ற உள்குத்து ராஜ தந்திர முயற்சியே தவிர,இது உண்மையாகத் தமிழர் நலம் பேணும் நோக்கம் அல்ல.
இலங்கை தமிழர் இனம் அழிக்கப்படுவதற்கு இலங்கை அரசுக்கு முழு ஆதரவையும் அளித்தது, மத்தியில் ஆட்சி புரிந்தது, காங்கிரஸ் அரசு;
அதனோடு தோளுக்குத் தோளாய் நின்று ஆட்சி அதிகாரத்தின் அத்தனை சுகங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தது கலைஞர். உடன் கட்டை ஏறும் பத்தினியாகக் கலைஞரின் கரங்களைக் கோர்த்துக் கொண்டு குள்ளநரி அரசியல் செய்தது திருமாவளவன்.
கலைஞரும் திருமாவும் நினைத்திருந்தால் முள்ளிவாய்க்கால் போரில் பிரபாகரனைக் கைது மட்டும் செய்து, பெரிய அளவில் இனப்படுகொலை ஏற்படாதிருக்கப் பண்ணியிருக்கலாம்.
ஆனால் சோனியாவின் சொந்த வன்மத்துக்கு உடன்பட்டுத்தான் கலைஞர் ஒரு போலி நாடகத்தை நடத்தினார். அவரது உண்ணாவிரதமானது பிரபாகரன் பிணமானதுக்குப் பழச்சாறு சாப்பிட்டதுபோல்தான் ஆனது.
இது நம் அனைவரின் கண் முன்னே நடந்த அருவறுப்பான அரசியல்.
பிரபாகரன் அதர்மவழியில் கொல்லப்படுவதற்கு அனைத்து உதவிகளையும் செய்தது சோனியாவின் சொற்படி நடந்த காங்கிரஸ் அரசு.
இத்தகைய இழி செயல்களுக்கு ஒத்து ஊதி, பின் ஒப்பாரி வைத்தழுத கலைஞரை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தமிழர்கள் முற்றிலுமாகக் களை எடுத்தனர்.
அதன் பின் கொஞ்சமும் லஜ்ஜையின்றி இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக ‘டெசோ’ என்றும் ‘தமிழ் இனம்’ என்றும் ‘தமிழர் நலன்’ என்றும் போலிக் கண்ணீர் சிந்திப் பிழைப்பு நடத்தும் அவலத்துக்குக் கலைஞர் ஆளாகி இருக்கிறார், இன்று.
மத்தியில் காங்கிரஸ் அரசின் அதிகார நிழலை விட்டு ஒதுங்காமல் கலைஞர் நடத்தும் அரசியல் தமிழருக்கல்ல; அவரது ஒட்டு மொத்தக் குடும்ப நலனுக்கு மட்டுமேதான் என்பது,பாவம் இன்னும்கூட பலருக்குப் புரியவில்லை.
அந்தப் புரியாதவர்கள் போலி அரசியல்வாதிகளின் புரட்டு ஆதரவாளர்களாத்தான் இருக்க முடியுமே தவிர, அறிவார்ந்த சிதனையும் சரியான அரசியல் பார்வையும் கொண்டவர்களாக இருக்க முடியாது.
இந்த உண்மைகளை உணராதவர்கள்தான் இலங்கைவாழ் தமிழர்களுக்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் ஏதோ ஒரு விடியலைக் கையில் வைத்திருப்பவர்கள்போல் ‘இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது’ என்னும் கோஷத்தைக் கொடி பிடித்துக் கொண்டு கூட்டத்தில் ‘கோவிந்தா’ போடுகிறவர்களாகக் கூவுகின்றார்கள்.
நண்பர்களே,
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது’ என்பது திரிபு வாதம்; தெளியாத அரசியல் பேதம்; அரைவேக்காட்டு அல்பத் தனம்.ஆழ்ந்த உள் நோக்கம் கொண்ட அரசியல் பித்தலாட்டம்.
இந்தியா அதில் கலந்து கொண்டு இலங்கையில் நடை பெற்றுள்ள
இன அழிப்பு வன் கொடுமை மற்றும் போர்க் குற்றம்’ குறித்து எடுத்துரைத்து இலங்கையைக் கண்டித்து, இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரத்
இத்தருணத்தைப் பயன்படுத்தத் தூண்டாமல், அதற்கான சந்தர்ப்பத்தையே ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்று போராடுவதைத்தான் தமிழர் ஆதரவுப் போராட்டம் என்று அனர்த்தம் கொண்டிருக்கிறார்கள்.
உண்மைக்கு எதிரான அரசியல் தீண்டாமையை வளர்ப்பதில் அவ்வளவு அக்கறை இவர்களுக்கு.
‘காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது’என்று போராடுவது தமிழர் நலனுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
எப்படி?
இதுவரை மத்தியில் உள்ள சோனியாவின் அரசு, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான வஞ்ச உணவோடுதான் செயல்பட்டு வந்தது. அதற்குத் தமிழகத்தை ஆட்சி புரிந்த கலைஞரும் அவரோடு இரண்டறக் கலந்து அரசியல் செய்த திருமா அவர்களும் ஒத்துழைத்து வந்தார்கள்.
இதன் மூலம் உலகின் ஒட்டு மொத்தத் தமிழர்களிடையில் காங்கிரஸுக்கு எதிரான ஆறாத சினமும் மாறாத வடுவும் தோன்றிஉள்ளூரி முதல் உலகத்தமிழர்வரை,உணர்வால் ஒன்றுபட்டிருக்கும் நிலையில் அதனோடு கூட்டு வைத்திருப்பவர்கள் எல்லோருமே தமிழருக்குத் துரோகம் செய்தவர்களே’ என்றும் ’ காங்கிரஸ் தமிழர் இன விரோதி’ என்றும் உலகத் தமிழர்களிடையே ஆழமாகப் பதிந்து விட்டிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி விட்ட இத்தருணத்தில் தமிழக வாக்காளர்களை வசீகரிக்க ஏதாவது ஒரு காரணத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றன், காங்கிரசும் அதனோடு கூட்டணி வைத்திருக்கின்ற கட்சிகளும்.
இந்த நிலையில் ’இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது’என்ற வாதத்தை முன் வைப்பதும் அதன் மூலம காங்கிரஸை ஒப்புக்கொள்ள வைப்பதும் இதுவரை தாங்கள் இலங்கைத் தமிழர் இனப்படுகொலை விஷயத்தில் எட்டப்பனாக இருந்து சோனியாவுக்கும் ராஜ பக்க்ஷேவுக்கும் ஒத்துழைத்த ஐந்தாம் படைக் காரியங்களை மறைத்துக் கொள்ளவும் காங்கிரஸ் இந்த விஷயத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆஹராவாகத் திரும்பி விட்டது என்று காட்டவும்தானே தவிர உண்மையில் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அல்ல.
இன்று எழுப்படும் வெறும் உணர்ச்சிகள் சார்ந்த கோரிக்கையை வலுப்படுத்தி அதன் அடிப்படையில் ‘தமிழர்களின் ஒட்டு மொத்த உணர்வை மதித்து இந்தியா இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாது’ என்று அறிவித்து விட்டால், இங்கு அதைத் தங்கள் வெற்றி என்று கொண்டாடுவதோடு, காங்கிரஸ் அரசின் கொள்கை முடிவுகளை ஆதரித்து. இனி இலங்கைத் தமிழர் விஷயத்தில் காங்கிரஸை நம்புகிறோம்’ என்று சொல்லி அதனோடு தமிழகத்தில் கூட்டணி போட்டுக் கொள்கிற அரசியல் சந்தர்ப்பவாதம் இது என்றாகாதோ?
அதற்காகத்தான் இவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே இதில் மறைந்துள்ள ராஜ தந்திரம்.
ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதில் கலந்து கொண்டு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவா? என்பது பெரிதா? நீ அதில் கலந்து கொள்ளாதே? என்பது பெரிதா?
’கலந்து கொள்ளக்கூடாது’ என்று போராடுவதன் மூலம்
இதுவரை இலங்கைத்தமிழின அழிப்புக்குத் துணைபோன காங்கிரஸ் அரசைத் தூய்மைப்படுத்தவும் ‘சரி நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம்’ என்று காங்கிரஸ் அறிவிப்பதன் மூலம் தமிழகத்தில் கூட்டணி போட்டுக் கொண்டு எதிர்ப்பாளர்களின் ஆதரவை வரும் தேர்தலில் காங்கிரஸ் பெறுகின்ற ராஜ தந்திரமாகவும் மாற்றிவிடத்தான் இம்முயற்சி.
எனவே, நாடாளுமன்றத்தேர்தலில் திமுகவையும் திருமாவையும் தனது கவசமாக்கிக் கொண்டு வாக்காளர்களை எட்டிப்பார்க்கக் காங்கிரஸ் தூண்டி விடும் உள்குத்து அரசியல் ராஜ தந்திரம்தான் காமன் வெல்து மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்ற கோஷம்.
காமன் வெல்த்தில் கல்ந்து கொள்ளாமல் போனால் அது இந்தியாவுக்கும் இலங்கைவாழ் தமிழர்களுக்கும்தான் இழப்பு. பிரதமர் மன் மோகன் சிங் இன்று எல்லாவகையிலும் தரம் தாழ்ந்து பிரதமர் பதவியின் தரத்தையும் வெகுவாகத் தாழ்த்தி விட்டார்.
இனி இவர்,இலங்கைத் தமிழர் விஷயத்தில் எதைப் பேசினாலும் அது எடுபடப்போவதில்லை. இந்த அவமானத்தையும் சரி செய்து தப்பித்துக் கொள்வதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளாமல் யாராவது ஒரு சப்பாணியை இந்தியாவின் பிரதிநிதியாக அனுப்பி பிள்ளையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டப் போவது காங்கிரஸ்தான்.
அவிந்து போன அரசியலுக்கு ஆலாபனை பாடுகின்ற வெற்றுக் கோஷங்களில் காங்கிரஸுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் வெட்கமே இல்லை.
நாம்தான் வெட்கித் தலைகுனிகிறோம்.
இவண்-
கிருஷ்ணன்பாலா
3.11.2013

Saturday, November 2, 2013
பண்டித நேரு அறிவு ஜீவியா?
அறிவார்ந்த நண்பர்களே,
என்னுடைய ‘அரசியல் சதுரங்கம்-4 ஆவது பகுதியைப் படித்த அமெரிக்க வாசக நண்பர் ஒருவர் கேட்டார்:
”பண்டித நேருவை ஒரு 'அறிவுஜீவி' என்று நீங்கள் குறிப்பிட்டதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கட்டாயம் இதற்கு விளக்கம் தேவைப்படுகிறது”
என்னுடைய கருத்து இதுதான்:
பண்டித நேரு, தான் பிறந்த குலத்தால் மட்டுமல்ல; படிப்பினாலும் நன்கு பாண்டித்யம் (புலமை) பெற்றவர்தான்.
சிறையில் இருந்தவாறே,தன் மகள் இந்திரா பிரியதர்ஷினிக்கு எழுதிய கடிதங்கள் (Discovery of India) அவருடைய செறிவு மிக்கக் கூர்த்த மதியை குவலயத்துக்குக் கூறும்.
அவருடைய தந்தைக்கு இருந்த செல்வமும் சொத்துக்களும் அப்போதைய சுதந்திரப் போராட்டத் தலைவர்களை எல்லாம் உபசரிக்கவும் ஊக்கப்படுத்தவும் பயன் பட்டது. இந்திய தேசிய சுதந்திரப் போராட்டங்களின் அறிவிக்கப்படாத புரவலராக, மோதிலால் நேரு மிகுந்த அக்கறையோடு செயல்பட்டார்; தனது செல்வத்தை அதற்கென்றே செலவும் இட்டார்.
அதன் மூலம் மோதிலால் நேரு காந்தி அடிகள் முதல் கடைசித் தொண்டன் வரை அனைவராலும் மதிக்கத் தக்கவராக உயர்ந்திருந்தார்..
இந்தப் பொன்னான வாய்ப்பு, இங்கிலாந்தில் மன்னர் பரம்பரையினரை விடவும் அதிக சொகுசோடு பயின்று பட்டம் பெற்றுத் திரும்பியிருந்த தன் புதல்வர் பண்டிட் நேருவை, இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் அண்ணல் காந்தி அடிகளின் தலைமையின் கீழ் இணைத்து, இந்திய அளவில் அண்ணல் காந்தியின் நிழலில் ஆரோக்கியமான தலைவர்களில் ஒருவராய் வளர்க்க மோதிலால் நேருவுக்குப் பயன்பட்டது..
நேருவின் வாதத் திறமையும் பேச்சும் அவர் கற்ற கல்வியால் செழித்திருந்தது; அவருடைய அரசியல் செல்வாக்கோ, தந்தை மோதிலால் செல்வத்தால் சிறந்திருந்தது.
தேசத்தின் தலை எழுத்தை விதி இவ்வாறுதான் வரைந்திருந்தது.
தன் செல்வமகன் ஜவஹர்லால் நேருவை உலகில் உள்ள மன்னர் பரம்பரையினரின் வாரிசுகளை விடவும் சொகுசாக வளர்த்துப் படிக்க வைத்து மிகப் பெரிய பதவியில் அமர்த்த வேண்டும்’ என்பதை மோதிலால் கனவு கண்டார். அதற்கென்றே திட்டமிட்டுக் காய்களை நகர்த்தினார்.
அதற்கேற்பவே, உலக நாடுகளின் தலைவர்களின் பிள்ளைகள் பலரும் படித்து வந்த உலகப்பிரசித்தி பெற்ற இங்கிலாந்து நாட்டின் HARVARD UNIVERSITY தன் மகன் ஜவஹர்லால் நேருவைச் சேர்த்துப் படிக்க வைத்தார்.
நேரு அங்கு பயின்றபோதுதான் உலகத்தில் பல்வேறு நாட்டுத் தலைவர்களின் வாரிசுகளுடன் பழகவும் நட்புக் கொள்ளவுமான இயற்கையான வாய்ப்பைப் பெற்றார்.
இதுதான் பண்டித நேருவை உலக அரசியல் பார்வையாளராக மாற்றவும் உயர் தலைமைச் சிந்தனையாளராக உருவாக்கிக் கொள்ளவும் அடித்தளம் இட்டது.
இந்திய விடுதலையின் போது உலக அரங்கில் முக்கிய நாடுகளின் ஆட்சித் தலைவர்களாக, தன்னுடன் பயின்ற நண்பர்கள் பலரும் இருந்ததும்
அவர்களின் பின்புல ஆதரவு நேருவைப் பாரதப் பிரதமராக்கப் பிரிட்டீஷ் பேரரசைத் தூண்டியதும் ’நேருவே பிரதமராகப் பொறுப்பேற்க வேண்டும்’என்ற மவுண்ட் பேட்டன் பிரபுவின் திடமான வற்புறுத்தலும் நேருவுக்குக் கிடைத்திருந்த பேரதிர்ஷ்டம்.
அப்போது இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் நேருவை விடவும் அதிகம் தியாகம் செய்த தலைவர்கள் இருந்த போதும் அவர்களுக்குக் கிட்டாத ’பிரதமர் பதவி’ பண்டித நேருவுக்கு கிடைத்தது என்றால் அவர்கள் எல்லோருமே சுதேசிகள் என்பதுடன், ஜவஹர்லால் நேரு, சர்வதேச அரசியல் தெளிவாளராகவும் உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கும் அறிமுகம் ஆன நண்பராகவும் இருந்ததும்தான்.
‘இப்படியொரு வாய்ப்பு தனது மகனுக்கு அமையவேண்டும்’ என்பதை நன்கு திட்டமிட்டேதான் பண்டித நேருவை அவர் தந்தை படிக்க வைத்தார்; பின்பு அவரை காந்தி அடிகளின் அங்கீகாரத்தோடு சுதந்திரப் போராட்டக் களத்தில் இணைத்தார்.
பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு, இன்று காங்கிரஸ்காரர்கள் அலறும் RSS (Rashtriya Swayam Sevak Sangh) ல் மிகுந்த ஈடுபாடு இருந்திருந்தது.
அதற்கும் காரணம் மோதிலால்
நேருதான். இந்திய சுதந்திரப் போராட்டக் கட்டம் முக்கிய நிலையை எட்டிய போது,பண்டித நேரு RSSலும் முக்கிய உறுப்பினராக இருந்தார். இந்தியா விடுதலை பெறும் சூழ்நிலைகள் உருவானபோது, ஆர்.எஸ். எஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ள வேண்டும்’ என்ற கருத்தை நேரு வெளியிட்டார். ஆனால் RSSன் உயர்பீடம் அதை ஏற்கவில்லை. ஏற்றிருந்தால் நேரு RSSன் சார்பில் இந்தியாவின் உயர் பதவியைப் பெற்று விடலாம் என்று திட்டமிட்டிருந்தார்.
RSSன் கொள்கை இந்திய தேசத்துக்குத் தொண்டு செய்வது’ ஒன்றேதான் அதற்கென்று ஆட்சி அதிகாரத்தில் ஈடுபடுவதில்லை’ என்பதுதான். அதனால்தான் ‘ஸ்வயம் சேவக்’ என்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஆக, மோதிலால் நேருவுக்குத் ’தன் மகன் எப்படியும் இந்தியாவின் பிரதமராக வேண்டும்’ என்பதற்காக இந்திய தேசியக் காங்கிரஸிலும் அதற்கு எதிர்த் திசையில் இருந்த RSS இரண்டிலும் செல்வாக்குப்பெற்ற முக்கியப் பிரமுகராக இருக்கும்படியே நேருவை உருவாக்கி இருந்தார்.இன்னொரு பரிமாணத்தில் ஜவஹர்லால் நேருவைப் பிரிட்டிஷ் குடிமகனாக்கி அங்கு ‘Lords Houseல் இடம் பெறச் செய்து விடவேண்டும்’ என்ற எண்ணமும் இருந்தது
இந்தியா விடுதலை பெறும் தருணத்தில் RSS எவ்விதத்திலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதில்லை என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துவிட்டதால், தந்தை மோதிலால் நேருவின் செல்வாக்கு ஜவஹர்லால் நேருவைத் தேசியக் காங்கிரசின் உயர் இடத்தில்
வைத்தது.
‘நேருதான் இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டும்’ என்பது இந்தியர்களால் நிர்ணயிக்கப்படவில்லை; அது பிரிட்டீஷ் அரசால் தீர்மானிக்கப் பட்டது என்பதுதான் வரலாற்று ரகசியம்’ இதைச் சொன்னால், இங்குள்ள காங்கிரஸ் தேசியப் பற்றாளர்களில் சிலர் சீறுவார்கள்;பலர் பதறுவார்கள்.
அப்படி அவர்கள் சீறுவதையும் பதறுவதையும் வரவேற்கின்றேன்.
சரித்திரத்தின் புரட்டுக்களைப் புரட்டிப் போடவும் எனக்குத் தெரியும்.
பண்டித நேரு இந்தியாவின் பிரதமராகப் பதவிக்கு வந்ததில் திட்டமிட்ட அறிவு ஜீவித்தனம் இருக்கிறது என்பதுதான் உண்மை.
இந்திய சுதந்திரத்துக்குப் பின் ’யார் பிரதமர்?’ என்ற கருத்து பெரிய அளவில் விவாதம் ஆகும் நிலையில், பண்டித நேருவுக்கும் சர்தார் வல்லபாய் படேலுக்கும் போட்டி இருந்தது.
பிரிட்டிஷார் ஆதரவினாலும் சர்வதேசத் தலைவர்களின் ஆதரவாலும் பிரிட்டீஷாரின் நிர்ப்பந்தத்தாலும் பண்டிட் நேருவின் செல்வாக்கே வெற்றி பெற்றது.
உண்மையான சுதேசிக் கொள்கையும் தேசத்தைப் பெற்ற தாயினும் பெரிதாய்ப் போற்றும் பண்பும் கொண்ட லோகமான்ய திலகரின் வழி நின்ற சர்தார் வல்லபாய் பட்டேல் அப்போதைய அரசியல் நிர்ப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டு, இந்தியாவின் துணைப்பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருக்க ஒப்புக் கொண்டார்’ எனதுதான் சரித்திரம்.
ஆனால் நேரு இந்தியாவின் உண்மையான எழுச்சிக்கும் வீரத்துக்கும் வித்திடவில்லை. வாழும்வரை ஒரு பூர்ஷ்வாப் பிரதமராகவே வாழ்ந்து,தனது பரம்பரைப் புகழை மட்டுமே கருத்திற் கொண்டு ஆட்சி புரிந்தார். இந்தியாவின் பரம்பரைப் பெருமையை ஒருபோதும் அவர் தூக்கி நிறுத்தவில்லை.
தன் பரம்பரையின் கீழ் இந்திய ஜனநாயகத்தை அடிமைப்பட்டுக் கிடக்கச் செய்த அந்த அறிவுஜீவியை,பண்டித நேருவை ‘அற்ப மனிதர்’ என நாம் ஒதுக்கி விட முடியாதுதான்.
இவண்-
கிருஷ்ணன்பாலா
2.11.2013..

Friday, November 1, 2013
அரசியல் சதுரங்கம் :4 (கவிழும் கப்பல் காங்கிRUSH!)
இந்தியாவில் பரம்பரை ஆட்சிக்கு முடிவு கட்டும் வேகம் அநேகமாக எல்லா இந்தியரிடத்திலும் பரவி இருக்கிறது.
இந்த எண்ணத்துக்கு எண்ணெய் ஊற்றி,திரியைத் தீண்டி மேலும் பளிச்சென்று எரிய வைக்கும் உபாயமாக நர்மதை நதி தீரத்தில் உலகிலேயே மிக உயர்ந்த சர்தார் வல்லபாய் படேலின் முழு உருவச் சிலைக்கான அடிக்கல்லை நாட்டி, சர்தார் வல்லபாய் பட்டேலின் தேசப்பற்றையும் துணிவையும் அவருக்கு எதிராக நேரு செய்த சதிகளையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார் நரேந்திர மோதி.
அவர் பேசுவதை மேடையில் இருந்தவாறே ரசித்த அத்வானி அவர்களும் கூட வல்லப்பாய் பட்டேலின் தீரமிக்க செயலினால் இந்தியா தீவுகளற்ற பெரிய தேசமாக வடிவெடுத்தத்தை ஆதாரபூர்வமாக எடுத்துப் பேசி இருக்கிறார்.
உண்மையில் பண்டித நேரு, ஐதராபாத் நிஜாமின் இஷ்டத்துக்கு முடிவெடுக்க விடுமாறு வெளிநாட்டுப் பயணத்தில் இருந்தவாறே தனது உள்துறை அமைச்சரான வல்லபாய் பட்டேலிடம் தொலை பேசியில் கேட்டுக் கொண்டும் கூட நேருவின் உத்தரவை/ஆலோசனையைப் புறக்கணித்து ஒரே விசையில் நிஜாமைப் பணிய வைத்த வல்லபாய் பட்டேலின் விவேகம் இப்போது நாட்டுக்கு நன்கு வெளிச்சமாகி இருக்கிறது.
காஷ்மீர் பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த நேருவுக்கு இருந்த பூர்வீக உறவுகளால் முஸ்லீம் அதிகார வர்க்கத்தின் மீது எப்போதும் கொண்டிருந்த தனி அக்கறை சர்தார் வல்லபாய் பட்டேல் முன்னால் சருகாகிப் போனது.
உண்மையில் இந்தியாவின் முதல் பிரதமராக வந்திருக்க வேண்டியவர் சர்தார் பட்டேல்தான். ஆனால் அப்போதைய பிரிட்டீஷ் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலான மவுண்ட் பேட்டன் பிரபுவும் அவரது மனைவியும் நேருவுடன் கொண்டிருந்த அதீத நட்பின் காரணமாக நேருதான் பிரதமர் என்பது பிரிட்டீஷ் அரசால் தீர்மானிக்கப்பட்டு விட்டது.
அதாவது நேருவே பிரதமராக இருக்க வேண்டும் என்பது ஒரு சர்வதேச நிர்ப்பந்தமாக்கப்பட்ட அரசியல் சதி.
நேருவின் வீரமற்ற விவேகத்தினால்தான் இந்தியா,தனது மிகப் பெரும் நிலப் பரப்பை சீனாவிடம் இழந்தது; சீனப் படை எடுப்புக்குக் காரணமே நேருவின் மெத்தனமும் தப்புக் கணக்கும்தான்.நேருவின் மிகப் பெரிய ராஜதந்திரத் தோல்விகளில் இது ஒன்று.
ஆனால், சீனாவின் ஆதிக்கத்தை ஒப்புக் கொண்டுவிட்டு, மிகப் பலவீனமான நிலையில் ’இந்தோ-சீனா பாய்,பாய்’ என்ற கோஷத்தை மிகப் பெரும் ராஜ தந்திரமாக நாடு முழுவதும் பரப்பிக் குஷியாக இருந்தவர் பண்டித நேரு.
உண்மையிலேயே பல்வேறு விஷயங்களில் மிகப் பலவீனமான பிரதமராக இருந்த பண்டித நேரு, ஒரு அறிவு ஜீவியே தவிர இந்த தேசத்தின் பெருமையை நிலை நாட்டியவர் அல்ல’ என்பது என் போன்ற நடு நிலைச் சிந்தனையாளர்களுக்கு இப்போதுதான் புரிகிறது. அப்போது அறிந்திருக்க அனுபவமும் இல்லை;அறிவும் இல்லை. வயதும் இல்லை.பிள்ளைப் பிராயத்தில் இருந்த காரணத்தால்.
ஏறத்தாழ 67 ஆண்டுகளுக்குப் பிறகு, நேருவின் பரம்பரை ஆட்சி முடிவுக்கு வர நரேந்திர மோதி காரணமாகி இருக்கிறார்.
வல்லபாய் பட்டேலின் அரசியல் துணிவும் தேசப்பற்றும் ’இந்தியாவின் சிற்பி அவர்தான் ‘என்ற உண்மையும் நாட்டு மக்களுக்கு நறுக் கென்று மோதி முன் வைக்கப்போவதுகூட,வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய எதிர்ப்பு அலையை காங்கிரஸுக்குத் தரும்’ என்பது கண்கூடு.
இனி எதிர்காலத்தில் தேசத்தின் நன்மைக்கென்றே முடிவெடுத்து ‘இரும்பு மனிதராகத் திகழ்ந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் மரணம்கூட அவரை பிடிக்காதவர்களின் சதியே காரணம்’ என்ற அதிர்ச்சியூட்டும் ஆய்வுகள் வெளிவரத்தொடங்கும் என்பதை எதிர்பார்க்கலாம்.
இந்த அரசியல் சதுரங்கத்தில் மோதியின் காய்கள் அசுர வேகத்தில் நகர்கின்றன.
பி/ஜே.பிக்குப் பல மாநிலங்களில் அடித்தளங்கள் இல்லை.மோதியின் ஆதரவு அலையைப் பயன்படுத்தி, வாக்கு வங்கியை உறுதிப்படுத்தும் அளவுக்கு எல்லா மாநிலங்களிலும் அதன் கட்சி அமைப்பு இல்லை’அதனால் மோதியின் நம்பர் விளையாட்டில் அவர் உரிய மெஜாரிட்டியை ப் பெற முடியாது’ என்று காங்கிரஸார் கணக்குப் போடுகின்றனர்.
ஜெயிக்கின்ற குதிரை மீதுதான் பணம் கட்டுவது நமது தேசத்தின் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வழக்கம்.
கவிழும் கப்பலில் இருந்து ’மட’ மட’வென்று வெளியேறித் தப்பிப்பவர்கள் அரசியலில் அனுபவம் மிக்கவர்களாக இருப்பர்..
இப்போது நரேந்திர மோதிதான் 'Running Horse and Winning Race"
மாநிலங்களின் உள்ள கட்சிகளில் பலவும் ‘மோதியோடு மோதினால் தங்கள் நிலை என்ன்வாகும்?’ என்பதை நன்கு தெரிந்தே வைத்துள்ளன.
எனது மூன்றாவது அரசியல் சதுரங்கக் கட்டுரையில் இதைக் கணித்து எழுதி
இருக்கின்றேன்.
அதைப் படிப்போர் இந்த உண்மையை இங்கே ஊர்ஜிதம் செய்து கொள்வார்கள்.
தமிழகத்தில் அமையவுள்ள மோதியின் கூட்டணியானது, நான் கணித்தவாறே அமைவதற்கான அரசியல் சதுரங்கம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.இன்று .
மக்கள் நலனைக் கருத்தில் கொண்டால், இப்போதைய மத்திய கப்பல் துறை அமைச்சர் திரு ஜி.கே. வாசன், இந்தக் கவிழும் கப்பலைக் கை கழுவி விட்டு வெளியேறத்தான் வேண்டும்.
அப்படிக் கை கழுவி விட்டால் இன்னொரு துருப்பிடித்த படகுகளில் ஏறிப் பயணிக்கும் ஏமாளியல்ல அவர்.
இவண்-
கிருஷ்ணன்பாலா
1.11.2013.
அன்னையை இழந்தோம்!
வானத்தில் சிதற,மழையைப்
பெய்யவே இருந்த மேகம்
பெருந்துயர் நீரைச் சிந்த
'அய்யகோ’ என்றே இந்த
அகிலமே அலற; நாங்கள்
செய்வதொன் றறியாச் சேதி;
சேர்ந்ததே என்ன சொல்ல?
அலைஎனும் புகழ்கொண் டாலும்
ஆர்ப்பரிக் காத வாழ்க்கை;
மலை யெனும் துயர்வந் தாலும்
மருண் டிடாவீர நெஞ்சம்;
தலைமைக்கே பிறந்து வந்து
தாயகம் காத்த சக்தி;
சிலையென வீழ்ந்து,இன்று
சிவந்ததே, இந்தத் தேசம்!
‘இந்தியா’ என்ற போது,
‘இந்திரா’ நினைவு தோன்றும்;
‘இந்திரா’ என்ற போது,
இந்தியா வந்து தோன்றும்;
மந்திரச் சொல்லாய் மக்கள்
மனதிலே வாழ்ந்திருந் தாளை...
அந்தோ,நாம் அரற்றுகின்றோம்;
அதர்மத்தா லிழந்து விட்டோம்!
போருக்கு எதிராய் வெகுண்டு
போரினைச் செய்தாள்;அக்கப்
போருக்கு உரிய பகையை
புறம் ஓட வைத்தாள்;வங்கப்
போருக்குத் துணிந்து நாட்டை
பூத்திடச் செய்தவி வேகம்
யாருக்கு இனிமேல் உண்டு?
எங்களுக் கினியார் தலைமை?
மன்னர்மா நியத்தை ஒழித்து
மாற்றிய தீரம்;வங்கி
உன்னதப் பொதுமை யாக
உயர்த்திய வேகம்; போரில்
மின்னலாய் எழுந்து வென்று
மீட்டிய வீரம்; நாட்டில்
இன்னொரு தலைவர்க் கில்லை;
இந்திரா பெற்ற பேறு!
எந்திரத் தொழில் நுட்பங்கள்;
இனியவள் பேரைச் சொல்லும்;
இந்திய ஒருமைப் பாடு
இந்திரா உருவம் தீட்டும்;
சந்தனம் எரித்த எங்கள்
சத்தியத் தாயின் புகழை
சந்திரன் உள்ள மட்டும்
சரித்திரம் பேசும்;பேசும்!
விழிகளின் நீரை மாற்றி
வீறு கொண் டெழுவோம்;
மொழிகளின் ,இன பேதத்தின்
முடிவுரை செய்வோம்;வாழும்
வழிகளில் ஒருமைப் பாட்டின்
வலிமையைத் தொழுவோம்;அன்னை
மொழிந்த நல் தேசப் பற்றில்
முனைவதே வாழ்க்கை என்போம்!
இவண்-
கிருஷ்ணன்பாலா
31.10.1984
குறிப்பு:
1984 அக்டோபர் 31 அன்று அன்னை இந்திராவை அவரது மெய்க்காவலனே சுட்டுக் கொன்ற நிகழ்வு இந்தியாவையே உலுக்கியது; என் மனத்தையும் உலுக்கியது. அன்று அன்னை இந்திராவின்மீது நான் கொண்டிருந்த நேசமும் பற்றும் இந்த அஞ்சலிக் கவிதையை எழுதச் செய்தது.
அந்த வாரம்ஆனந்த விகடனிலும் இதன் ஒரு பகுதி பிரசுரம் பெற்றிருந்தது.
ஒருதாய் மக்கள்!
ஒருதாய் மக்கள்
________________
ஓடும் நதிகள் பல பெயரில்,
உள்ளன எனினும் அவை இருக்கும்
நாடு என்பது ஒன்றே தான்:
நாமிதை அறிவோம்; அது போல,
பேசும் மொழியும் பல நூறு
பேணும் இனமும் இருந் தாலும்
தேசம் ஒன்றே;என்ப தனைத்
தெளிந்தோம் அதுநம் தாய் நாடே!
காடும் மலையும் கடல் சூழ்ந்து
காணும் இந்தப் பாரதத் தில்
வீடும் சுகமும் மனை யறமும்
வேண்டும் மக்கள் ஒன்றே தான்!
மதங்கள் பலப்பல என் றிருந்து
மக்கள் இறைவனை அறி கின்ற
விதங்கள் வேறு என்றா லும்
வீழ்வதும் வாழ்வதும் இம் மண்ணே!
பசுமை கனிந்த மலர்ச் சோலை
பறவைகள் ஒன்றாய் அதில் புகுந்து
வசிப்ப தைப்போல நாமெல் லாம்
வாழும் சோலை தாய் நாடே!
பிறந்த நாடே தாய் நாடாய்:
பேசும் மொழியே தாய் மொழியாய்;
சிறந்து வாழும் மனித ரெல்லாம்
சேர்ந்து வாழ்வதும் ஒரு நாடே!
இமயம் முதலாய்க் குமரி வரை
இங்கும் அங்கும் நடந் திடுவோம்;
சமயம் எதுதான் என்றா லும்
சமத்துவம் அதற்கே இடந் தருவோம்!
மதத்தைப் படைத் தவன் மனிதடா:
மக்களைப் பிரித் ததும் அவன்தானே?
மதத்தை இறைவன் படைத் திருந்தால்
மக்களுக் கெதற்குப் பல மதங்கள்?
இறைவன் ஒருவன் என்றி ருந்தால்;
எல்லாம் அவனே எனச் சொன்னால்
மறைவே தங்கள் பலப் பலவாய
மண்ணில் இருப்பது எதற் காக?
மனிதர் தங்கள் அறி வாலே
மனதில் தோன்றும் உணர் வாலே
மனிதரை மனிதர் வன்முறை யால்
மாய்க்கும் விலங்குகள் ஆனது ஏன்?
அறிவும் அன்பும் இன்ன தென
அறியா மாக்கள் விலங்குகள் தான்;
பொறுமையும் சகிப்பும் இல் லாது,
பூமியைக் கெடுப்பது அவ்வினம் தான்!
ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் போல்
உறவுடன் நாட்டில் வாழ்வ தல்லால்;
பெரிதாய் வாழ்க் கைவே றுண்டோ?
பேதைகள் தானிதை அறி யாரே!
இவண்-
கிருஷ்ணன்பாலா
31.10.2013
Subscribe to:
Posts (Atom)